உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் 28

லும் நாடோறும் நம் அனுபவத்தில் வைத்து விளங்கக் காண்கின்றோம் அல்லே மோ? உயிரின் பக்குவமும் அதற்கேற்ற உடம்பின் அமைவும் ஒருங்கிசைந்து நிற்றலால் ஒருவரியற் கையைப் பிறழ்த்தி அவரை வேறியற்கை பெறச் செய்வது முற்றுங்கூடாத தன்றேனும் அம்முயற்சி மிக முறுகி நடக்க வேண்டுதலின் அஃது அரிதேயாமென்க இவ்வுண்மை நன்குணர்ந்தன்றே இக்காலத்து மனோ தத்துவ சாத்திரிகளும் மகாரின் பக்குவத்தினையும் மனப் போக்கினையும் நுனித்தறிந்து அவற்றிற்கு எதிரிடையாகாது இணங்கிய முறையிலே வைத்து அவர் தம்மைப் பயிற்றுதல் வேண்டுமென வற்புறுத்து வாராயினர். சத்துவப் பகுதி மிக்க சிறான் ஒருவன் மாட்டுத் தாமத குணங்களை எழுப்ப முயன்றால் அம்முயற்சி எளிதிலே கைகூடவதன்றாம்; தாமத குணப்பகுதி மிக்கு வாய்ந்த ஏனையொரு சிறானைச் சத்துவ குணத்திற் பழக்க முயன்றால் அதுவும் எளிதிற் கைகூடுவ தன்றாம். அதனால், அவ்வவர்பால் மிக்குக் காணப்படுங் குணப்பெற்றி இதுவெனத் தெளியவறிந்து, அதற்கேற்ப ஒழுகி, அவ்வழியே சிறிது சிறிதாக அவர்தம் ஆன்ம குணங்களைத் திரிவுபடச் செய்தால் அவை முறை முறையே திரிபெய்தி அங்ஙனந் தாம் திரிபெய்துதற் கேற்பத் தம்மோ டொருங்கொத்து நிற்கும் சூக்கும சடப்பொருள்களான குண தத்துவங்களையும் தாம் புலனாதற்கு இயைந்த வகையால் திரித்துத் தம்மோடொத்து நிற்கச் செய்யும். இம்முயற்சி மிக அரிய தொன்றேயாயினும் நுண்ணறிவு மிக்க சான்றோர் தீ நெறியிற் செல்லுதற்கு மிகவிழையும் பொல்லாரை அதனி னின்றுந் திருப்பி நன்னெறிக்கண் உய்க்குமாற்றால் அதன் நுட்பம் இனி துணரப்படும். அது நிற்க. இதுகாறும் விளக்கிப் போந்தமை கொண்டு குண தத்துவங்களென்பன ஆன்ம குணங்கள் புலனாதற்பொருட்டு அவைதம்மோடொத்து இயைந்து நிற்குஞ் சூக்கும சடக்கருவிகளே யாமென்று நுணுகியறிந்து கொள்க.

இனி இப்பெற்றியவாங் குண தத்துவங்கள் மூன்றனுட் சத்துவம் என்பது உண்மை அல்லது நன்மையெனப் பொருட ருவது. ஆணவம் அகன்ற ஆன்மாவினோ டொற்றித்து விளங்கும் உண்மை நன்பொருளான அருட் குணம் புலப்பட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/81&oldid=1591410" இலிருந்து மீள்விக்கப்பட்டது