உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

55

அவை நிற்குநிலைக்குப் பொருந்தச் சத்துவ முதலான பிரகிருதி தத்துவங்கள் ஏறியுங் குறைந்தும் அமைந்த உடம்புகள் அவ்வுயிர்கட்கு நெறியே வந்து இயையும். இவ்வுண்மை யெல்லாம் பல்வேறு பிறவிகளின் நின்ற பல்வேறுயிர்களின் தன்மைகளை ஆராயவே இனிது விளங்கும். பகுத்தறிவுணர்ச்சி யில்லா உயிர்த் தொகுதிகளுள் ஒன்றினொன்று முரண்பட்ட இயல்புடைய பிறவிகளுக்கு ஆவும் புலியுமாகிய இரண்டுமே அமையுஞ் சான்றாம். தெவிட்டாத் தெள்ளமிழ்தம் அன்ன தீம்பாலைச் சுரந்து ஒழுகுவிக்கும் அமைந்த ஆவின் உயிரானது ஆப்பிறவியில் வருதற்குமுன் பல் பிறவிகளையெடுத்து அவற்றானெல்லாம் தன்கண் ஏறிய ஆணவந் தேயப்பெற்றுச் சிறிதே அருள் வழி நிற்றலின் சாந்த குணம்மிக்கு அச்சாந்த குணத்திற்கு ஏற்ப நகமுங் கூர்ம் பற்களும் இல்லாமற் குளம்புந் தட்டைப் பற்களும் பொருந்திய சத்துவதேகத்தில் வந்து ஆவாய்ப் பிறந்து மக்களுக்குப் பெரிதும் பயன்படலாயிற்று. மற்றுப் புலிப் பிறவியில் வந்த உயிரோ அதுபோல் ஆணவந் தேயப் பெறாததாகலின் அவ்வாணவமிகுதிப் பாட்டிற்கு ஏற்ப இராசத்தாமத குணங்களைத் தோற்றுவிக்கும் நகமும் கூர்ம் பற்களும் உள்ள உடம்பில் வந்து புலியாய்ப் பிறந்து மக்கட்குப் பயன்படாதாய் அவர்க்குப் பெரிதும் இன்னலி ழைப்பதாயிற் றென்க. ஆவுடம்பின்கண் அமைந்த உறுப்புக் களின் இயல்பையும், புலியுடம்பின்கட் பொருந்திய உறுப்புக் களின் பெற்றியையும் உற்றுணரவல்லார்க்கு அப் பிறவியிற் சத்துவகுணம் மிக்கு ஏனை இராசத தாமதங்கள் குறைந்த மையும், புலிப் பிறவியில் இராசத தாமதம் மிக்குச் சத்துவங் குறைந்தமையும் எளிதிற் புலப்படா நிற்கும். இவ்வாறே இன்னும் தாழ்ந்த உயிர்களுள்ளுஞ் சத்துவம் முதலிய குணங்கள் மூன்றும் ஒன்றினொன்று ஏறியுங் குறைந்து நிற்குமாற்றை நுனித்தறிந்து கொள்க. ஈண்டுரைப்பின் மிக விரியும்.

இனி மக்கட் பிறவியுள்ளுங் குழவிப்பருவந் தொட்டே அவ்வுயிர்களின் பக்குவத்திற்கு இணங்கச் சத்துவம் முதலிய குணங்கள் மிகுந்துங் குறைந்தும் நிற்றல் அனுபவ நுண்ணறி வாற் கண்டு கொள்ளப்படும். சிறுமகாரில் ஒரு சிலர் நற்குணமும் நல்லறிவு நற்செயலுமுடையராயிருத் தலும், வேறு ஒரு சிலர் சுருசுருப்பும் தீவிர அறிவும் மிகு முயற்சியும் உடையராயிருத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/80&oldid=1591409" இலிருந்து மீள்விக்கப்பட்டது