உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் - 28

L

யென்றுணர்க. இனி ஆன்மாவின்கட் பற்றிய ஆணவமலம், மாயை கன்மங்களின் றொடர்பாற் சிறிது சிறிதாத் தேய்வுற்று ஆன்மாவை விட்டு வரும். இவ்வாறு ஆணவ மலவலி தேயத் று தேயச், சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய உயிரின் மாட்டு முன்னெல்லாம் மறைவாய் நின்ற அருளொளியானது முறை முறையே புலப்பட்டுத் தோன் றும். அது தோன்றத் தோன்ற உயிரின்கட் சாந்தகுணமும் அம்மறையே மிக்கெழுந்து தோன்றும். ஆணவமல முனைப்பால் உயிர் இயக்கமின்றிக் கிடக்கும் நிலையே தாமத மென்றும், அஃது இறைவனருளால் உந்தப்பட்டுச் சிறிதே ஆணவமலக் கவிப்பினின்றும் எழுந்து இயங்கும் நிலையே இராசதமென்றும், பின்னர் அது சிறிதுநேர மாயினும் ஆணவ வயமின்றி அருள் வயமா நிற்கும் நிலையே சத்துவ மென்றும் இவ்வாறு பகுத்துணர்ந்து கொள்க. இவ்வாறு பகுத்துரைக்கப்பட்ட மூவகை நிலைக்கண்ணும் உயிர்க்குணம் புலப்பட்டுத் தோன்றுதற் கிடமாய் நிற்கும் குண தத்துவமும் மூவகை நிலை வேறுபாட்டாற்றானும் மூவகைப் பட்டு அவற்றோடு இயைந்து நிற்கும். உயிர் ஆணவ குண முனைப்பில் அகப்பட்டு மந்தமாய் நிற்கு நிலைக்கு இணங்கியது தாமதகுண தத்துவம்; அஃது அதனிற் சிறிது விலகி முயற்சி யுடைத்தாய் இயங்கு நிலைக்கு இணங்கியது இராசத குண தத்துவம்; அஃது அதனிற் பின்னும் விலகிச் சிறிது அருள் வயமாய் நின்ற நிலைக்கு இணங்கியது சத்துவ குணதத்துவம். உயிரின் அருட்குணம் மிகவுந் தூயதாய்ச் சூக்குமமாய் இருத்தலின் அது விளங்குதற்குக் கருவியாய் இடந்தந்து நிற்கும் சத்துவகுண தத்துவமும் தூயசூக்கும மாகும்; ஏனை இராசத தாமத நிலைகள் உயிர் ஆணவ மலப்பட்ட அசுத்த தூல குண நிலைகளாமாகலின், அவை வெளிவருதற்கு இடந்தந்து நிற்கும் இராசத தாதம குண தத்துவங்களும் தூல வியல்புள்ளனவா மென்க.எனவே, சத்துவ குணம் மிகவுந் தூய சூக்கும தத்துவமா மென்பதூஉம், ஏனை இராசத தாமதங்கள் அதனிற் றாழ்ந்து ஒன்றி னொன்று தூல தத்துவமா மென்பதூ உம் அறியற்பாலன.

னி மேற்பிறவிகளிற் கன்மங்கள் நுகரப்பட்டு உயிர் பக்குவமான அளவிற்கு ஏற்ப, அவ்வுயிர்க்குணங்கள் மூன்றும் ஒன்றினொன்று ஏறியுங் குறைந்தும் நிற்குமாகலின், அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/79&oldid=1591408" இலிருந்து மீள்விக்கப்பட்டது