உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

53

தோன்றுந் தத்துவங்களும் முக்கூற்றின் கட்பட்ட மூவேறினப் பொருள்களாயின வென்க. அற்றாயின், குணத்தத்துவத்தின் இயல்புணர்ந்தன்றி இப்பெற்றி தேறலாகாமையின் அதனைச் சிறிது விளக்கிக் காட்டுகவெனின் அவ்வாறே காட்டுதும்.

குணம் என்னும் பெயரைக் கேட்டன்மாத்திரை யானே இத் தத்துவம் உயிர்க்குணத்தைக் குறிப்பது போலுமென மலையற்க. ஆன்மாவின் சங்கற்ப வறிவு விளங்குதற்கு இ டஞ் செய்து நின்ற மனோதத்துவம் போலவும், அதன் தான் என்னு முணர்வு தோன்றுதற்கு இட டஞ் ஞ் செய்துநின்ற அகங்கார தத்துவம் போலவும், ஆன்ம குணங்கள் விளங்குதற்கு இ.டஞ் செய்து நின்ற இதுவுங் குணதத்துவமெனப் பெயர்பெற லாயிற்று. இவ்வாற்றால் இக்குணத்தத்துவமும் ஏனையபோல வெறுங் றுங் சடக் கருவியேயாமென்பதும் சொல்லாமலே விளங்கும்.

இவ்வுரைநூலின் மேற்பகுதிகளில் ஆன்ம விலக்கணங் கூறியவழி ஆன்மா ஆணவமலம் எனும் அறியாமை வயப் பட்டு அநாதி தொட்டே நிற்குமாற்றை இனிது விளக்கிப் போந்தாம். இனி அது மலமாகிய மருளைச் சார்ந்தவழி மருளாயே நிற்குமாறும் ஆண்டே பெறக் கிடந்தன. ஆன்மாவின் இயற்கைக் குணங்கள் அநாதி தொட்டே ஆணவமலவயமாய் நிற்றலின். அவ்வாணவத்தை அதனினின் றுங் கழிப்பித்தற் பொருட்டே மாயா தேகமும் மாயா வுலகமும் அதற்கு வந்து வாய்த்தன. இங்ஙனம் ஆன்மாவி னோடு ஒற்றித்து மறைவாய் நிற்கும் ஆணவமல குணங்களை வெளியே தோன்றச் செய்து தொலைப்பிக்கும் பொருட்டுப் பிரகிருதி மாயையிற் றோற்விக் கப்பட்ட சூக்கும தத்துவமே குணதத்துவம் என்னும் பெயர்த் தாம். 'தம்மி லொருவாற்றா னொத்த பொருள்களே ஒருங்கு யையற்பாலன' என்னும் அளவைநூல் வழக்கிற்கு இணங்க, ஆன்மாவின் கட்டோன் றும் ஆணவமலசடப்பொருட் குணங்களுக்கு ஏற்ப அவற்றோடொத்த பிரகிருதிமாயா ப்பொருட் குண தத்துவம் அவற்றை வெளிப்படுத்துதற்கு வந்து இயைவ தாயிற்று. இவ்வாறு ஆணவகுணங்களோடியந்து அவற்றை வெளிவரச்செய்தல் பற்றியே பிரகிருதிமாயை யிற்றோன்றி இது குணதத்துவ மெனப்பட்டதன்றி பிறிதில்லை

சட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/78&oldid=1591407" இலிருந்து மீள்விக்கப்பட்டது