உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

52

  • மறைமலையம் - 28

உயிர்க்குத் தானென்னு முணர்ச்சி தோன்றுதற்கு அகங்காரம் என்னுங் கருவியினுதவி இன்றியமையாது வேண்டற் பாலதேயா மென்று கடைப்பிடிக்க, மனத்தினுஞ் சூக்கும நிலையின தாயுள்ள இவ்வகங்காரம் என்னுஞ் சடக்கருவியோடு ஒன்றுபட்டு நிற்குங்கால் உயிர்க்குத் தான் என்னும் உணர்வு நிகழும்; அவ்வுணர்வு நிகழ்ந்த பின்றை அது மனம் என்னுங் கருவியினைப் பற்றி இந்திரிய வாயிலாற் புறப்பொருட் குணங்களைக் கவர்ந்து அறிவு நிகழ்த்துமென்க. முதற்கண் யான் என்னும் உணர்ச்சி நிகழாக்கால் மனமும் பஞ்சேந்திரியங் களும் ஒரு சிறிதும் இயங்காமை தன்னை மறந்து உறங்குவோன் மாட்டும். சிறிது இயங்கினும் ஒரு குறிப்பின் கட்பட்டுத் தொடர் புற நில்லாமை தன்னை ஓர் அறிவுப்பொருளெனவே நினையாத பித்தன் மாட்டும் வைத்துக் கண்டுகொள்ளப்படும். இவ்வாறு ணருமிடத்துத் தான் என்னும் உணர்வு முன்னும் அதன்பின் மன அறிவும் அதன்பின் ஐம்பொறியுணர்ச்சியும் முறை முறையே ஒன்றன் பினொன்றாய்த் தோன்றி விரியுமாறு இனிது பெறப் படுதலின் இவை மூன்றும் ஒன்றினொன்று தூலமாஞ் சடக் கருவி களாமென்பதூஉம் ஓரினப்பொருள்களா மென்பதூ உம் தெற்றென விளங்கா நிற்கும்.

இனி, யான் பேசினேன் யான் நடந்தேன் யான் செய்தேன் யான் மலங்கழித்தேன் யான் விந்து விட்டேன் என்றற்றொடக் கத்து உரைவழக்குகளில் வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என்னுங் கன்மேந்திரியங்கள் ஐந்தும் யான் என்னும் உணர்வின் வழித்தாக நடைபெறுதல் அறியக்கிடத்தலின், இவை ஐந்திற்கும் முதலாவதூஉம் யான் என்னும் உணர்வுக்கு இடஞ்செய்யும் அகங்கார தத்துவமே யாமென்று உணர்ந்துகோடல் வேண்டும்.

அற்றேல், இவ்வாறுரைக்கப்பட்ட அகங்கார தத்துவத் தினின்றே மனமும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுந் தோன்றா நிற்ப, மனத்தையும் ஞானேந்திரியங்களையும் ஒன்று சேர்த்து அவை யிரண்டும் ஓரினப் பொருள்களென்றும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் வேறோ ரினப்பொருள்களென்றுங் கூறியதென்னை யெனின்! இவ்வகங்காரத்தத்துவம் தன்னினுஞ் சூக்குமமான குணதத்துவத்தின் சேர்க்கையால் முத்திறப்பட்டு நிகழ்தலின், அம்முத்திற வேறுபாட்டின்கண் வேறுபட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/77&oldid=1591406" இலிருந்து மீள்விக்கப்பட்டது