உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

51

களாவதும், ஏனைக் கன்மேந்திரி யங்கள் ஐந்தும் அவற்றின் வேறான வேறோர் இனமாவதும் இ னிது பெறப்பட்ட முடிபுகளாம் என்க.

இனி இங்ஙனம் இருபகுதிபட்ட இவ்விரு வேறு கருவி களுக்கும் மூலமாய் முதல் நிற்கும் நுண்பொருள் இதுவென ஆராயற்பாற்று. யான் காண்கின்றேன், யான் கேட்கின்றேன், யான் அறிகின்றேன் என்றற் றொடக்கத்து வழக்குகளில் ‘யான்’ என்னும் உணர்வின் பின்னதாயே காண்டல் கேட்டல் அறிதல் முதலிய உயிர்வினைகள் நிகழக் காண்டலின், இவ்வறிவு முயற்சி கட்கெல்லாம் முதலாயிருப்பது யான் என்னும் உணர்வேயாம் என்பது பெற்றாம். மற்றுக் காண்டல் கேட்டல் முதலிய உயிரறிவுகள் நிகழ்தற்குக் கண் செவி முதலான புறக்கருவிகளும், இஃது யாதாகற்பாற்றெனச் சிந்தித்தறிதற்கு மனம் என்னுங் கருவியும் இன்றியமையாது வேண்டப்பட்டாற் போல யான் ற் என்றும் உணர்ச்சி நிகழ்தற்கும் ஒரு கருவி இன்றி யமையாது வேண்டப்படும். இதுவே சைவ சித்தாந்தத்தினும் சாங்கியத் தினும் அகங்காரம் என்னுந் தத்துவமாம் என்று கூறப்பட்டது. அகங்காரம் என்னும் இத்தத்துவம் மனம் முதலிய மற்றைத் தத்துவங்களைப் போற் சடக்கருவியென்றாலும், மூளையின் சூக்கும சாரமாகிய மனத்தினும் இது சூக்குமமாய் நிற்ப தான்றென்று அறிதல் வேண்டும். அஃதெற்றாற் பெறுது மெனின்; 'யான் அறிகின்றேன் என்னும் வழக்கின்கண் அறிதற்றொழிதற்கு முன்நிற்பது யான் என்னு முணர்வே யென்பது பெறப் பட்டதாகலின் அவ்வறிதற் றொழிற்குக் கருவியான L மனத்தினும் யான் என்னும் உணர்விற்குக் கருவியான அகங்கார தத்துவம் சூக்குமமாதல் துணியப்படும் என்க. அஃதென்னை, யான் என்னும் உணர்வினைச் செய்வது நேரே உயிர் என்றுரைத்தலே அமையாதோ அதற்கும் ஒரு கருவி வேண்டுமோவெனின்; நன்று சொன்னாய், மூளையின்கண் ஒருபகுதி சிறிது பழுதுபட்ட விடத்தும் அதனியல்பு சிறிது பிறழ்ந்துபோய விடத்தும் ஒருவனுக்குத் தான் என்னும் உணர்வு நிகழாமை அங்கசேதன பண்டிதர்களால் இனிது வலியுறுத்தப் பட்டிருத்தலானும், அயர்ந்த உறக்கத்தின்கண் உயிர் இருந்தும் அதற்குத் தான் என்னும் உணர்வு நிகழக் காணாமையானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/76&oldid=1591405" இலிருந்து மீள்விக்கப்பட்டது