உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் 28

தன்னெதிரே தோன்றிய பொருள்களின் வடிவத்தையும் நிறத்தையும் அப் பொருள்களினின்று வரும் ஒளியினுதவியாற் கண்டறியுமே யல்லாமல் தானே அப்பொருள்கள் மாட்டுச் சென்று அக் குணங்களைப் பற்றுவதன்று; மூக்கானது முல்லை மான்மதம் முதலியவற்றினின்று வந்த நறுமணத்தைத் தான் கவருமல் லாமல் தானே வலிந்து சென்று அதனைக் கவருந் தன்மைய தன்று; செவியானது புறப் பொருள்களிடத்தே தோன்றிக் கடல் நீரின் அலைபோல ஆகாயத்தின்கட் போதரும் ஓசையைத்தான் இருந்த விடத்திருந்தவாறே ஏற்று அறியுமல்லது தானே அப்பொருள்கண் மாட்டுச் சென்று அவ்வோசையைப் பற்றி அறிவதன்றாம். இங்ஙனம் ஞானேந்திரி யங்கள் ஐந்தும் தாம் இருந்தவிடத் திருந்த வாறே அறிதற் றொழிலை நிகழ்த்தக் காண்டுமாகலின், இவ்வறிதற் றொழிலைத் தம்மாட்டு நிகழ்விக்கும் மனம் என்னுங் கருவியோடு இவை நேரே சென்று இயைதற்குரிய இயல்பு வாய்ந்தனவாகும். இங்ஙனம் இவை மனத்தோடு இயைந்து நிற்குமாப் போல், ஏனைக் கன்மேந்திரியங்கள் ஐந்தும் அதனோடு இயைந்து நிற்பனவல்ல. என்னை? கையானது இடுதல் ஏற்றலாகிய தாழில்களைச் செய்வதன்றித் தானே அவ்விடுதல் ஏற்றல் களின் முறைகளை அறியவல்ல தன்று; வாயானது பல்வகைச் சொற்களைக் கோவைப்பட மொழியுமேயல்லது அச் சொற்பொருணுட்பங்களைத் தானே யுணருந் தன்மைய தன்று; காலானது அங்கு மிங்கும் போதல் வருதல்களைச் செய்யுமே யல்லாமல் அத் தொழில்களின் பயனை இற்றென அறிவதன்று; குறியானது விந்துகழிவு முகத்தால் இன்பத்தினைச் செய்யு மல்லாது அவ்வின்பத்தின் வருவாயும் பயனுமெல் லாம் அறிய வல்லதன்று; குதமானது வெளிவிடற் பாலதாம் மலவழுக்கைப் புறம் படுக்குமேயன்றி அச்செயலின் இயைபெல்லாந் தானே யுணர வல்லதன்றாகலின் என்க. இங்ஙனம் இக் கன்மேந் க் திரியங்கள் ஐந்தும் வெறுந்தொழின் மாத்திரையே செய்யக் காண்டுமாகலின் இவை ஏனை ஞானேந்திரியங்கள் போல் மனத்தோடு நேரே இயைதற்கு ஏற்றவாகாமை தெள்ளிதிந் பெறப்பட்டது. இவ்வாற்றால், அறிதற் கருவியான மனமும், அதனோடு நேரே சென்றியைந்து அறிதற் றொழிலை நிகழ்த்து வனவான ஞானேந் திரியங்கள் ஐந்தும் ஓரினப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/75&oldid=1591404" இலிருந்து மீள்விக்கப்பட்டது