உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

சிவஞான போத ஆராய்ச்சி

49

நரம்பின் வழியே கொண்டு போய் மூளையின்கண் மனத்தே உய்ப்பது உயிரின்றி வொளியாகுமேல் அவ்வறிவொளி ம்பில் நிற்குமாறு யாங்ஙன மெனின்; உயிரறிவு உடம்பின் ஓரிடத்தீரிடத்தன்றி அவ்வுடம்பெங்கும் வியாபகமாய் நிற்குமாதலின் அஃது எவ்விடத்தே உணர்வு எழினும் அதனை ஆண்டு நின்றும் உடனே மனத்தின்கட் செலுத்துமென்க. இஃதென்னை? உடம்பெங்கும் வியாபியாய் நிற்கும் உயிர் தானே உணர்வு தோன்றுமிடமெல்லாம் தானும் உடன் நின்று அறியுமென் னாமல், அஃது அதனை மனத்தின்கட் கொண்டு போய் வைத்துப் பின்னர் அறியும் எனல் என் என்று வினாவின்; உயிர் உடம்பெங்கும் வியாபியாய் நிற்பினும் மூளையின் கண்ணதாம் மனத்தின் வாயிலான் அன்றி அறிவு நிகழப் பெறாது. இஃதெற் றாற் பெறுதுமெனின்; பிராணிகளின் மண்டையோட்டைக் கழற்றி மூளையையும் பிரித்தெடுத்து அப்பாற்படுத்தியபின் உயிர் உயிர் இருந்தும் அப்பிராணிகள் உடம்பின் நாற்பக்கங்களினும் உண்டான உணர்வுகளை அறியும் ஆற்றல் இல்லாதவாயின. இப்பெற்றியெல்லாம் மேலே எடுத்துக் காட்டினாமாகலின் மீண்டும் அவற்றை ஈண்டு விரிக்கிலம். எனவே உடம்பெங்கும் நிறைந்த உயிர் மனத்தின் வாயிலானன்றி அறிவு நிகழப் பெறாதென்னும் உண்மை சிறிதும் ஐயுறற்பாற்றன்றென்பது விளங்காநிற்கும். உயிரினறிவு விளங்குதற்கு ஏற்ற திறத்தால் அமைக்கப்பட்ட சூக்கும சடக்கருவியே மனமாமென்றும், அம்மனம் இருத்தற்கு இடமாக அமைக்கப்பட்ட தூல சடக்கருவியே மூளையாமென்றும் இங்ஙனம் பகுத்தறிந்து கொள்க.

இனி இப்பெற்றித் தாம் மனத்தான் இயக்கப்படுவன ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்துமா மென்பதை மேலே காட்டினாம். ஞானேந்திரியங்கள் ஐந்தும் அறிதற்றொழிலை மாத்திரம் நிகழ்த்துவன. மெய்யானது தன்மேல் வந்து உரைசும்பொருட்டன்மையை மாத்திரம் அறியுமல்லது, தானே புறத்துச் சென்று பரிசவுணர்ச்சி யினைக் கவர மாட்டாது; வாயானது தன் கண் வந்த பண்டங்களின் அறுவகைச் சுவைகளையும் உருசித்தறியும் அல்லாமல் தானே புறத்துச் சென்று அச் சுவைகளை அறிவதன்று; கண்ணானது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/74&oldid=1591403" இலிருந்து மீள்விக்கப்பட்டது