உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

  • மறைமலையம் - 28

போலவே இப்பெரிய அண்டத்தைத் தன்கட் காட்டும் பிண்டத்தின் கண்ணதாகிய மனமும் அவ்வணுவினும் பன்மடங்கு பெரிதா தல் துணிபொருளேயா மென்க. எனவே, உலகியற் பொருள்கள் அனைத்தையுங் கவரற்கியைந்த மூளையென்னுந் தாதுவின் சாரமே மனம் எனப்படுதற்கண் ழுக்கொன்றும் இல்லையென்று கடைப்பிடிக்க.

அற்றேல் அஃதாக, மனம் எனப்படும் இவ்வவயவம் தலையில் மூளையின் கண்ணே அமைந்திருத்தலின் கால் விரல் நுனியிலே மெல்லென த ஊரும் பொருளையும் அஃது உணர்ந்திடுமாறு யாங்ஙனமெனின், நன்று வினாயினாய்; உலகத்துப் பொருள்களில் ஒளியும் மின்னொளியும் செல்லும் விரைவினை நினைப்பின் அவை அறிவுக்கும் எட்டாத அதிசய கதியினை உடையவாயிருக்கின்றன. ஒளியானது ஓர் இமை கொட்டும் முன் ஓர் இலக்கத்து எண்பத்து ஆறாயிரம் மைல் தூரஞ் செல்லு கின்றது! மின்னொளியோ வன்றால் இதனினும் விரைவாய் ஒரு நொடிப் பொழுதில் இரண்டிலக் கத்து எண்பத்து எண்ணாயிரம் மைல் தூரம் செல்லுகின்றது! புறத்தே காணப்படும் உலகியற் பொருள்களே இங்ஙனம் பாவித்தற்கும் எட்டாத தூரம் விரைந்து செல்லுமாயின், அகத்தே உயிரின் அறிவொளியால் உந்தப்பட்டுப்போம் உணர்வின் வேகத்தை வ்வளவிற் றென்று வரையறுத் துரைத்தலும் ஏலுமோ? அற்றாயின், உடம்பின் ஓரிடத்தே தோன்றும் ஓர் உணர்வு மூளையின் கண்ணதாம் மனத்தின் கண் உ னே சென்று விளங்குமாறு அவற்றிடையே கருவியாய் நின்று உதவுவது தான் யாதோ வெனின்; அதுவே நரம்பு எனப்படுவதாம். இந் நரம்பு ஒன்றிரண்டன்றி எண்ணுதற்கும் அகப்படாதவாறு பலப்பல வாய் விரிந்து கிடக்கின்றன. இந் கி

நரம்பின் தொகுதிகள் அத்துணையும் மூளையோடு

இயைக்கப்பட்டு உடம்பின் உட்புறப் பக்கங் கள் யாண்டும் நிறைந்திருக்கின்றன. இவ்வாறு இவை உடம்பின் கடையெல்லை முதல் மூளைவரையிற் றொடர் பட்டுக் கிடத்தலின், கால் விரல் நுனியிலே ஊரும் உணர் வானது பாவித்தற்கும் ஏலாத வேகமுடன் மூளையின்கண் மனத்தே சென்று விளங்குகின்ற தென்க. அங்ஙனமாயின், ஓர் எல்லையிற் றோன்றிய வுணர்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/73&oldid=1591402" இலிருந்து மீள்விக்கப்பட்டது