உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

61

பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் முதலிய பத்தும்; ஆகாயத்தின் கூறாவன மேற்கூறிய பிருதிவி முதலியவற்றின் கூறுகளிற் கலந்திருப் பன; உதாரணமாக, நகம், மயிர் முதலியன அறுக்கப் படுங்கால் நோயுண்டாக்குதல் இன்மையின் அவை பிருதி வியோடு ஆகாயமும் ஒருங்கு சேர்தலாற் றோன்று வன வென்பது பெற்றாம்; இங்ஙனமே ஏனையவும் நுனித்தறிந்து கொள்க. இவையெல்லாம் ஆராய்ச்சி முறையிற் செல்லும் இவ்வுரை நூலின்கண் எடுத்துக்காட்டலுறின் மற்றொன்று விரித்தலா மாகலின் தேகதத்துவ நூல்களிற் கண்டு தெளிக.

இத்துணையுங் கூறியவாற்றால், நான் என்னும் உணர்வு தோன்றுதற் கிடஞ்செய்யும் அகங்காரத்தத்துவம் குணதத்து வத்தின் சேர்க்கையால் தான் முத்திறப்பட்டு நின்று மனம் ஒன்று, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, தன் மாத்திரைகள் ஐந்து, பூதங்கள் ஐந்து ஆகத் தன்கீழ் இருபத் தொரு தத்துவங்களைத் தோற்றுவித்துக் கிடந்த அடை வெல்லாம் இனிது விளங்கா நிற்கும்.

இனி இவ்வியல்பிற்றாய அகங்காரத்தத்துவம் யாண்டு நின்றுந் தோன்றிய தென்பதனை ஆராயற்பாற்று. நான் என்னும் ணர்வு தோன்றுதற்குமுன் ஆன்மாவின்கண் ஒரு தலையான் நிகழற்பாலது யாதென நுணுகி ஆராயலுறின், அதுவே பகுத்தறிவென்று துணியப்படும். என்னை? அறிவுப் பொருள் அல்லாத மண் முதலிய தத்தவங்களின் வேறாகத் தான் ஓர் அறிவுப்பொருளென்று உயிர் தன்னைப் பகுத்துக் காணி னல்லால் அதற்கு 'நான்' என்னும் உணர்வு நிகழாமை, பகுத்தறிவில்லா விலங்கினங்கள் மாட்டு வைத்துத் தெளிய அறியப்படுதாலாலும், பகுத்தறிவுடைய மக்கட்பரப்பின்கண் மாத்திரமே 'நான்' என்னும் உணர்வு நிகழக்காண்டு மாத லாலும், இவ்வுணர்வுக்குமுன் ஒரு தலையான் நிகழ்வது பகுத்தறிவேயா மென்பதூஉம், அப்பகுத்தறிவின் பின்னதாய் அதன் கட்டோன்றுவதே ‘நான்’ எனும் உணர்ச்சி யாமன்பதூ உம் அங்கையங்கனிபோல் நிறுவப்படுதலால் என்க. இங்ஙனம் நிறுவப்படவே, உயிர்க்கு நான் என்னும் உணர்வினை எழுப்புதற் கருவியாய் உடன்நின்ற அகங்கார தத்துவத்திற்கு முன், அதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/86&oldid=1591415" இலிருந்து மீள்விக்கப்பட்டது