உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் - 28

6

பகுத்தறிவினை எழுப்புதற் கருவியாய் உடன் வந்தியைவது அதனினுஞ் சூக்கும வியல்பு என்னும் உணர்வினை விளை விக்கும் அகங்கார தத்துவமே ‘பகுத்தறி வினை'யும் விளைவிக்கு மென்று உரைத்தலாகா தோ வெனின், ஒக்கும்; ‘நானென்னும் உணர்வின் பின்ன தாய்ப் பகுத்தறிவு எழுமா யினன்றே அவ்வாறுரைத்தலாம்? இஃது இதனின் வேறு இஃது இதனை யொப்பது என்று பிரித்தும் ஒற்றுமை கொளுத்தியும் காண்கின்ற பகுத்தறிவு தன்னால் நான் எனும் உணர்வு வலிபெறல் அனுபவத்தான் அறியக்கிடத்தலால் பகுத்தறி வினின்றே நான் எனும் உணர்வு தோன்றுமென்று கடைப் பிடிக்க, ஒருவனைக் கண்டு இவன் புறத்தேயுள்ள பொருள்கள் எல்லாவற்றினும் வேறான இயல்புடையனா யிருக்கின்றான், தன்னுடம்பினும் வேறா யிருக்கின்றானென உயிர்ப் பொருளையும் உயிரல் பொருளை யும் வேறு பிரித்துக் கண்டும், இவ்வியல்பினனான இவனை யானும் ஒத்துளேன் என ஒற்றுமை கொளீஇயும் நான் எனும் உயிருணர்ச்சி உரம் பெறல் காண்க. என்றிவ்வாறு தன்னுணர்ச்சிக்குமுன் பகுத்தறிவு நிகழ்ச்சியுண்மை இனிது பெறப்படவே, அகங்கார தத்துவத் திற்குப் பிறப்பிடமாய் அதற்கு முற்றோன்றி நிற்பது புத்தி தத்துவமேயாதல் திண்ண மாம் என்க.

இனி, இப்புத் திதத்துவம் உயிரறிவை எழுப்புவித்தற்கு இன்றியமையா நுண்கருவியேயாயினும், இதுவும் ஏனைய தத்துவங்களைப்போல் வெறுஞ்சடப்பொருளென்றே ஓர்ந்து கொள்க. இது சத்துவகுணம்மிக்கு ஏனை இராசத தாமதங்களை டுக்கி நிற்குந் தூய சூக்கம பொருளாகும். இஃது எற்றாற் பெறுதுமெனின்:- உயிரின் அருட்குணம் விளங்குதற் கிடஞ் செய்து நிற்பது சத்துவமென்று மேல் விளக்கப்பட்டமையின், அவ்வருனொளியோடு அறிவும் ஒருங்குதோன்றுதற் கிடஞ் செய்யும் புத்தித்தத்துவத்தில் சத்துவகுணம் மிகமுனைந்து நிற்குமென்பது பெற்றாம்; இனி இதன்கண் அறிவேயன்றி அறிவு நிகழ்ச்சியும் உண்மையின் ஈண்டு இராசத குண இயக்குமுஞ் சிறிதுண்டு; இனி ஆணவவயமாய் நிற்கும் உயிரோடு ஒற்றித்து நிற்றலின் இத்தத்துவத்தில் அவ்வாணவ குணங்களைஒரோவழி வருவிக்கும் தாமதகுணம் இயக்கமுஞ் சிறிதுண்டு. ஆகவே, இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/87&oldid=1591416" இலிருந்து மீள்விக்கப்பட்டது