உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

63

எனப்

பகுத்தறிதல் முறையால் 'இஃது இவ்வியல்பிற்று பொருட்டுணிவு தோற்றுவித்தலோடு, இன்பதுன்பவயப்பட்டு அவ்வாற்றால் நல்வினை தீவினை சார்தற்குந் தான் இடமாய் நிற்குமென்று முணர்ந்துகொள்க.

இனி

இப்பெற்றித்தாகிய புத்திதத்துவம் பிறத்தற் கிடனாய் இதனினுஞ் சூக்குமவியல்புவாய்ந்து மேலதாய் நிற்பது குணதத் துவமாகும். இக்குணம் சத்துவம் இராசதம் தாமதம் என முத்திறப்படுமாறும், அவற்றினியல்புகளும் மேலே விளக்கிப் போந்தாம். இக்குண தத்துவம் பலவாய் அறிவில்லாத சடப்பொருளுமாய் இருத்தலின், இதுவும் அநித்தப்பொருளே யாகும். ஆதலால், இக்குண தத்துவம் தன்கண் மூவகை வேறுபாடுங் காட்டாது, பின்னுஞ் சூக்கும மாய்க் கரைந்து பொதுப்பட நின்றவழி, அதுவே பிரகிருதி என்று வழங்கப்படும். எனவே, பிரிகிருதி குண தத்துவத்தின் வேறன்றாயினும், அதனினுஞ் சூக்குமமாய் வேறுபாடு விளக்காது அதற்கு ஆதாரமாய் நிற்பதாகலின் அஃது அதனின் வேறு போல் வைத்து வழங்குதலே சைவசித்தாந்த நூல்கள் மேற்கொண்ட நெறியாம். இதன்கீழ் நின்ற இருபத்து மூன்று தத்துவங்களுக்கும் இன்றியமையாக் காரணப் பொருளாய் இருத்தலின், இது மூலப்பிரகிருதி என்றும் நுவலப்படும்; இச்சொற்றொடர் தமிழில் மூலப் பகுதி எனத் திரிந்து வழங்கும். இம்மூலப்பகுதி ருபத்து நான்காவது தத்துவம், நிலமுதல் மூலப்பகுதி ஈறாகிய இவ்விருபத்து நான்கும் ஆன்மதத்துவம் என்று ஒரு பெயராற் றொகுத்துக் கூறப்படும் என்க. இனி இவை ஆன்ம தத்துவம் வ என்று று ஓதப்பட்ட வாறென்னையெனின்;--“ஆன்மாவுக்கு அதி தெய்வமாகிய தத்துவம் ஆன்ம தத்துவமென உருத்திர னுக்குப் பெயராயிற்று” என்று ஆசிரியர் சிவஞானயோகிகள் கூறியதனால் அப்பெயர் சீகண்ட பரமேசுர உருத்திரர் மேற்றாதல் அறியப்படுதலின், அவரதிகாரத்தின் வயப் பட்டுத் தோன்றியும் ஒடுங்கியும் வாரா நின்ற இவ்விருபத்து நான்கும் அவ்விறைவர்க் குரிய பெயரால் அவ்வாறு ஆன்ம தத்துவம் என வழங்கப்பட லாயின வென்க.

இனி இவ்வுலகிற் பரந்துபட்டுக் கிடக்கும் புறச் சமயப் பொருள்களையெல்லாம் பகுத்துப் பார்க்கும்வழி அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/88&oldid=1591417" இலிருந்து மீள்விக்கப்பட்டது