உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் - 28

கண்ட

தம்முள் மூலப்பகுதிக்குமேற் பொருளுண்மை தொன்றைக் காண்டல் அரிதினும் அரிதாம். இப்புறச் சமயங்கள் புறப்புறச்சமயமெனவும் அகப்புறச் சமய மெனவும் இருவகை யாம்; அவை உலோகாயதம், மாத்திய மிகம், யோகாசாரம், சௌத்திராந்திகம், வைபாடிகம், ஆருகதம் என்பனவும்; தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம், பாஞ்ச ராத்திரம் என்பன வுமாம். இவற்றான் ஆராயப்பட்ட தத்துவங்கள் அத் துணையும் பிருதிவிமுதல் மூலப்பகுதி ஈறான வற்றுள் அடங்குவனவேயன்றி அவற்றின்மேற் படாமை அவ்வம் மத நூல்களுட் கண்டுதெளிக. ஈண்டு ரைப்பின் மிகவிரியும், இம்மதங்கள் தத்துவங்களை ஆயு நெறியில் ஒன்றினொன்று குறைந்து நிற்றல் பற்றிப்புறம் என்றும் புறப்புறம் என்றும் வகைப்படுத்து வைக்கப்பட்டன. இவற்றுள் உலோகாயதம் பிருதிவி அப்புத் தேயு வாயு வென்னும் நான்கு பூதங்களை யன்றி வேறு அவற்றிற்கு மேலுள்ள தத்துவங்களை அறியாமையின், அது கடையில் நிறுத்தப்பட்டது; பஞ்ச ராத்திரம் இருபத்து நான்காம் தத்துவமாகிய மூலப்பகுதியினை ஆய்ந்து, அதன் மேலும் உயிரையும் வாசுதேவனையும் ஆ ய்வான் சேறலால் அவை தம்முள் முதற்கண் நிறுத்தப் பட்டது. இவ்வாறன்றி இவற்றின் முறைக்கு வேறுகாரணங் கூறுவாரு முளர்; அவை பொருந்து மாயிற் கொள்க.

இனி அகப்புறச் சமயங்களெனப்படும் பாசுபதம், மாவிரதம், கபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம் என்பனவும், அகச்சமயங்களெனப்படும் பாடாண வாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாதசைவம், சிவ சங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பனவும், இச்சமயங்க ளெல்லா வற்றிற்கும் அப்பாற்பட்ட சுத்தாத்துவிதசைவ சித்தாந்த முமே மூலப்பகுதிக்கு மேற்பட்ட பன்னிரண்டு சூக்கும தத்துவங்களை ஆராய்ந்தன வாகும். இனி அப்பன்னிரண்டு தத்துவங்களையும் முறையே ஆராய்ந்து செல்வாம்.

மேலே கூறப்பட்ட மூலப்பகுதி என்பது சாத்துவிகம், இராசதம். தாமதம் என்னும் முக்குணங்களும் விளங்கித் தோன்றாமல் சமத்துவப்பட்டு இயைந்துநின்ற நிலையே யாமென விளக்கிப்போந்தாம். அப்பெற்றிப்பட்ட மூலப் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/89&oldid=1591418" இலிருந்து மீள்விக்கப்பட்டது