உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

65

தன்கட் டோன்றிய ஏனை இருபத்து மூன்று தத்துவங்களை நோக்கக் தான் சூக்குமம் என்று ஓதப் படினும், தானும் அச்சூக்கும நிலையில் முக்குண வடிவாய் நிற்றலில் பலவுமாய்ச் சடமுமாயிருத்தலால், அது தன்னினும் நுண்ணிய ஒரு காரணப் பொருளை அவாவி நிற்குமென்பது பெற்றாம். இங்ஙனம் இது பின்னுஞ் சூக்குமமாய் நுணுகி ஒடுங்குத் தத்துவம் கலை யென்னும் பெயரால் வழங்கப் படுதல் சைவசித்தாந்த நூல்களுட் கண்டு கொள்க. ‘கலை’ என்னும் இச்சொல் ‘கலா’ என்னும் வடமொழித் திரி பாகும்; இஃது ஒரு பொருளின் மிகச் சிறியதொரு கூற்றை யுணர்த்துதல் வடநூல்களிற் காண்க. இத்தத்துவம் மூலப் பிரகிருதியினும் மிகநுணுக்கமாவது பற்றிக் ‘கலை’ என்னும் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. அற்றேல், மூலப்பகுதி தன்னினுஞ் சூக்குமமான கலா தத்துவத்தில் ஒடுங்குமென்றல் வாய்வதேயாயினும், அக்கலா தத்துவமென்ப தொன்று உளதாவதைக் கண்டிலமாலெனின்; அறியாது கடாயினாய்; நமதுடம்பாகிய இப்பிண்டத்தினகத்தேயுள்ள பொருள்கள் அத்துணையும், புறத்தே உலகத்தினும் உண்டென்பது உண்மையாகலின், இவ்வுடம்பினுள் அதனுண் மையை விளக்கவே யாண்டும் அதனிருப்பு இனிது புலப்படற் பாலதாமென்க.

அறியாமையாற் பற்றப்பட்டுச் சிறிதாயினும் அறிவு விளங்கப்பெறாதுகிடந்த உயிரின் நிலையே சிருட்டியாரம் பத்திற்கு முற்பட்ட அனாதிகேவலம் எனப்படுவதாம். இங்ஙனம் அனாதிகேவலத்தின்பாற்பட்ட உயிர்க்கு அவ்வறி யாமையினை விலக்கி அறிவினை எழுப்புதலே சிருட்டித் தொழில் நடை பெறுதலின் கருத்தாவது பலதிறப்பட்ட உயிர் வளர்ச்சியினை யுற்றுநோக்குதலால் தெளிந்து கொள்ளப் படும். தாயின் கருப்பையினின்றும் வெளிப்பட்ட மகவு ஏதும் அறிவுடைத் தாயிருப்பக் காணாமையால், அஃது அக்கருப்பையுள் இருந்த காலத்தும் அக் கருப்பையுள் வாராமுன்னும் பெரியதோர் அறியாமை வயப்பட்டிருந்த தென்பதே தோற்றமாம். எல்லா வுறுப்புக்களுங் குறையாமல் பொருத்தப்பட்ட இவ்வுடம்போடு கூடிப் பிறந்த பின்னர் அம்மகவு நாள் முதிர முதிரச் சிறிது சிறிதா அறிவு விளங்கப் பெற்றுவருதல் கண்கூடாக் காணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/90&oldid=1591419" இலிருந்து மீள்விக்கப்பட்டது