உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் - 28

கிடந்த தன்றே? இங்ஙனங் காணப்படுதலால் இவ்வுடம்போடு கூடியல்லது உயிர்க்கு அறிவு நிகழ மாட்டாதென்பதும், அவ்வாறு உயிர் உடம்போடு கூட்டப் படுதலே சிருட்டியா மென்பதும், அங்ஙனம் உயிரோடு கூட்டப்பட்ட உடம்பு தூல சூக்குமமான பல திறப்பட்ட தத்துவங்களும் ஒருங்குதொக்க தாகையே யாமென்பதும் இனிது முடிக்கப்படும். புறத்தே பலப்பல வகையவாம் பலப்பல பொருள்கள் இருத்தலால் அவை தம்மை யெல்லாம் அறிதற்குக் கருவியாய் அவற்றோ டொத்த பலவகையுறுப்புக்களும் பழுதில்லா இவ்வுடம் பகத்தே அமைவவாயின. காணப்படுவனவற்றைக் கண்ணாற் கண்டும், கேட்கப்படு வனவற்றைச் செவியாற் கேட்டும், முகரப்படுவன வற்றை மூக்கான் முகர்ந்தும், சுவைக்கப் படுவனவற்றை நாவாற் சுவைத்தும், தொடப்படுவனவற்றை மெய்யாற் றொட்டும், சொல்லப்படுவன வற்றை வாயாற் சொல்லியும், இடுதல் ஏற்றல்களைக் கையாற் செய்தும், நடத்தல் ஓடல்களைக் காலாற் செய்தும், கழிக்கப்படுவனவற்றைப் பாயுருவுபத்தங் களாற் கழித்தும், சிந்திக்கப்படுவனவற்றை மனத்தாற் சிந்தித்தும், இவை தம்மை முனைத்து நின்று உணருமுகத்தால் நான் என்னும் உணர்ச்சிபெற்றும், உணர்ந்த வற்றைப் பகுத்தறிந்து துணிந்தும், முக்குணங்கண் மாறிமாறி நிகழப்பெற்றும், இம்முறையே உயிர்கள் தமதியற்கையறிவு விளங்க முன்னிருந்த அறியாமை

தேயப்பெறுகின்றன;

இவ்வாறு அறிவு விளங்கப்பெறுதற்கு ஓர் இன்றி யமையாக் கருவியான இவ்வுடம்பில் சில அவயங்கள் பழுதுபட்டுக் குறையுமாயின் அவை வாயிலாகப் பெறப்படும் அறிவும் பெறப்படுதல இல்லையாக உயிர் அறியாமையிற் சிக்குண்டு மயங்கும். இது கண்கூடாக எல்லார்க்கும் நிகழும் உண்மையனுபவமாதலின் இதனை மறுக்க யாரும் முந்துறார். உடம்பின்கட் சிற்சில வுறுப்புக்கள் குறைந்தாலும், அறிவுமிக விரியப்பெறாமல் அறியாமைக்கட்பதிந்து மயங்குறும் உயிர் இவ்வுடம்போடு முற்றுமே பொருத்தப்படாதாயின், அறியா மையில் முழுதும் வயப்பட்டு ஒரு சிறிதும் அறிவிலதாய்க் கிடக்குமென்பதை விண்டு சொற்றலும் வேண்டுமோ? இவ்வுண்மை வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/91&oldid=1591420" இலிருந்து மீள்விக்கப்பட்டது