உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

67

தாகவும், இதனொடு திறம்பி மாயாகாரியமாகிய இவ்வுடம் போடு கூடாதிருந்தவழி உயிர் முற்றறிவுடைய பிரமசொரூப மாயிருந்ததெனவும் இதனொடு கூடிய பின் எல்லா அறியா மையும், எல்லாத் துன்பமும் பெறுவதாயிற் றெனவும், ஏகான்ம வாதிகள் கூறாநிற்பர். இவ்வுடம்போடு கூடுதற்கு முன் உயிர் கடவுட்டன்மை யுடையதாயிருந்த தென்பதை உடம்போடு யிருந்து சொல்லும் அவ்வேகான் மவாதிகள் யாங்ஙனங் கண்டாரென வினாவுவார்க்கு இறுக்கு மாறின்மையானும், உடம்போடு கூடி நிற்றலால் அறியாமை விளையுமெனின் உடம்பொடு கூடி அறியாமை வயப்பட்ட ஏகான்மவாதி களுரைக்கு முரை யெல்லாம் அறியா மையாய் முடியுமாகலின் உயிர் அநாதியிற் பிரமவுருவாயிருந்த அவருரையும் அறியாமை யுடைத்தென்று கொள்ளப்படு மாகலானும், உடம்போடு கூடிய பின்னரேதான் உயிர்க்கு அறிவு நிகழ்ச்சி யுண்மை கண்கூடாய்ப் பெறப்பட்ட மெய்யனுபவ மாதலின் இதற்கு மாறாய்க் கூறுவன பொருட் பேறிலவாமா கலானும் உயிர்கள் சிருட்டி யாரம்பத் திற்குமுன் அறியாமை வயப்பட்டிருந்ததெனலே தேற்றப் பொருளாமென்க.

தனக்

கூறும்

இனி இவ்வாறு அநாதிகேவலத்தின்பாற் கிடந்த உயிரை அதனினின்றும் பிரித்து அறிவு கொளுத்துவான் வேண்டி அருட்பொருளான ஆண்டவன் மாயை யினின்றுங் காரியப் படுத்து இவ்வுடம்பை அதனோடு பொருத்தி இவ்வுலகிற் பிறப்பிக்க, அது பிறந்தஞான்று எவ்வியல்பிற்றாயிருந்த தென்பதைச் சிறிது ஆழ்ந்து ஆராய்மின்! அம்மகவு கண்ணி ருந்துங் காண்கின்றிலது, செவியிருந்துங் கேட்கின்றிலது. இங்ஙனமே ஏனை எல்லா வுறுப்புக்களுமிருந்தும் அவை தம்மை ஒரு சிறிதுந் தெரிந்து இயக்குகின்றிலது; எனவே, மூலப் பகுதி முதற் பிருதிவி ஈறான இருபத்து நான்கு தத்துவங்க ளோடு அம்மகவு ஒருங்கு கூடியிருந்தும் அக்குழவிப் பருவத்தே அவற்றாற் பயன் கொள்ள வறியாதிருந்து நாளேற நாளேற அவைதம்மைச் சிறிதுசிறிதா அறிந்து இயக்கு கின்றது. இங்ஙனம், இருபத்து நான்கு குறிப்புகளோடு இயைந்து நின்றும் அவற்றைப் பயன்படுத்த வறியாதிருந்த உயிரை அவ்வறியாமை யினின்றுஞ் சிறிதுசிறிதா விலக்கி அவை தம்மைச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/92&oldid=1591421" இலிருந்து மீள்விக்கப்பட்டது