உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் - 28

சிறிதாப் பற்றுமாறு ஏவி அதன் மாட்டு முயற்சியினை எழுப்புவது யாது? அதுவே கலை என்னுந் தத்துவமாமென்று அறிக. தாயின் கருப்பை யினின்றும் வெளிப்பட்ட மகவு ஏதுமறியாத அப்பொழுதே வாய்திறந்து அழுதலைக் கண்டாமன்றே? முழுதும் அறியாமை வயப்பட்டிருந்த அம் மகவுக்கு வாய் திறந்து அழும் முயற்சி யாங்ஙனம் வந்தது? மூலப்பகுதி முதலான இருபத்து நான்கு தத்துவச் சேர்க்கையால் வந்ததெனின்; அவ்விருபத்துநான்கு தத்துவங்கள் ஒவ் வொன்றும் தனித்தனி வெவ்வேறு தொழில்கள் உடைமை யானும், அத்தொழில்கள் அத்துணையும் 'நான்' என்னும் ஆன்ம வுணர்ச்சியோடு கூடி நிகழ்தல் வாலிபப்பருவத்தும் மனிதப் பருவத்துங் காணப் படுதலானும், பிறந்த குழவியின் மாட்டு 'நான்' என்னும் உணர்ச்சியும் அதன் வழிப்பட்ட அவ்விருபத்து நான்கு தத்துவத் தொழில்களுங் காணப்

UL

ாமையானும், கண்பூவா மகவின்மாட்டு நிகழும் அழுகை முயற்சியும் பாலுண் முயற்சியும் இவ்விருபத்துநான்கு தத்துவத்தின் வேறான ஒரு சூக்கும தத்துவத்தின் காரியமா மென்பது பாரிசேட வளவை யால் நன்கு துணியப்படும். அற்றேல் அஃதாக, அவ்விருபத்து நான்கு தத்துவத் தொழில் களும் பிறந்த மகவின்மாட்டு L ல்லையாதலைச் சிறிது

வகைபெற விளக்கிக் காட்டுக வெனின்; பிறந்தமகவு நல்லது தீயது பகுத்தறிந்து செய்யாமை யால் ஆண்டுக் குணதத்துவம் இயங்க வில்லை யென்பது பெற்றாம்; இன்னதிதுவென்று பொருட்துணிவு காணாமையின் ஆண்டுப் புத்தி தத்துவமும் இயங்க வில்லை யென்பது பெற்றாம், 'நான்' என்னும் உணர்வு நிகழக் காணாமையின் ஆண்டு அகங்கார தத்துவமும் இயங்க வில்லையென்பது பெற்றாம், ஒரு பொருளை நினைவதும் ஐயப் படுவதுஞ் செய்யாமையின் ஆண்டு மனோதத்துவமும் இயங்கவில்லை யென்பது பெற்றாம்; மெய் வாய் கண்மூக்குச் செவி என்னும் ஐந்தறிவுப் பொறிகளும் தொடுதல் சுவையறிதல் காண்டல் மோத்தல் கேட்டல் முதலிய தொழில்களைத் தெரிந்து நிகழ்த்தக் காணாமையால் ஆண்டவை உணர்வோடு இயங்க வில்லை யென்பதும் பெற்றாம்; வாய், கை, கால், குறி, குதம் என்னும் ஐந்து தொழிற்பொறிகளும் பேசுதல் இடுதல் ஏற்றல் நடத்தல் ஓடல் கழித்தல் முதலிய தொழில்களை அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/93&oldid=1591422" இலிருந்து மீள்விக்கப்பட்டது