உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

69

இயற்றா மையால் ஆண்டவை உணர்வோடு இயங்கவில்லை யென்பதும் பெற்றாம்; இனி மண் புனல் அனல் கால் வெளி முதலியவற்றின் கூறுகளான உறுப்புகள் தம்மாற்றிரண்ட உடம்பில் தத்தமக்குரிய தொழிற் கண்ணே கண்ணே இறைவன் ஆணைவழி நின்று தொழிற்படுதலின்றித் தாமாகவே இயங்கி உயிர்க்கு முயற்சியினை எழுப்புதல் ஒருவாற்றானும் பெறப்படா மையின் ஆண்டு அம்மகவின் அழுகை முயற்சி முதலியன அவ்வைம்பூதபரிணாம வுறுப்புகளால் எழுந்தன வல்ல வென்பதும் பெற்றாம்.

6

பெறவே, இவ்விருபத்து நான்கின் வேறாக அம்முயற்சியை அம்மகவின் மாட்டுத் தோற்றுவித்தற்கு வேறொரு நுண்ணிய தத்துவம் இன்றியமையாது வேண்டப் படுவதேயாம். அற்றன்று, குண தத்துவங்கள் மூன்றனுள் இராசதம் உயிர்க்குச் சுருசுருப்பினை விளைப்பது என்று மேற் கூறினமையின், ஆண்டு அதுவே அம்மகவின் மாட்டு அம் முயற்சியினைத் தோற்றுவிக்கு மென்றலே அமையுமாகலின், இவ்விருபத்து நான்கின் வேறான பிறிதொரு தத்துவம் அதற்கு வேண்டுமெனல் மிகையாய் வழுவாமாலெனின்; அறியாது கூறினாய். 'நான்' என்னும் உணர்வும் பகுத்தறிவு முடைய உயிர்கள்மாட்டுத் தோன்றும் சுருசுருப்பே இராசதகுணம் எனப்படுவதன்றி அவை யிரண்டும் நிகழாப்பருவத்தே தோன்றுவது இராசதத்தின் காரியமென்றல் பொருந்தாது; அற்றாயின், அவையிரண்டு மில்லா விலங்கினங் கண் மாட்டு, இராசதம் உண்டென்று மேற்கூறியது முன்னொடு பின் மலையுமாலோவெனின், விலங்கின்கண்மாட்டு நான் எனும் உணர்வும் பகுத்தறிவும் முற்றுமில்லை யென்றல் காட்சி யளவைக்கு மாறாம்; என்னை? இஞ்ஞான்றைப் பிராணிநூல் வல்லார் அவைதமக்கும் அவையிரண்டு முண்டென்பதை நிறுவுதலானும், நாய், குதிரை முதலியவற்றிற்கு அவையுண்

ன்பது அனுபவத்தில் நாளுந் தெளியக்கிடத்தலானும் மக்கட் பிறவியில் நிகழும் அத்துணை விலங்கினங்களில் நிகழா வென்பதே கருத்தாகலின் மாக்களிற் காணப்படும் இராசதமும் அவ்விரண்டன் சேர்க்கையோடு நிகழுமென்பதே துணிபொரு ளன்க. இனிச் சத்துவமுந் தாமதமுந் தோன்றாக் குழவிப் பருவத்தே அவற்றோ டினப்பட்ட இராசதமாத்திரந் தோன்று அவற்றோடினப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/94&oldid=1591423" இலிருந்து மீள்விக்கப்பட்டது