உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

75

தன்மைக்கு இழுக்காதலானும், மற்று அவ்வாறு மாறான தோற்றங் கூறுதல் எல்லார்க்கும் புலனாய் நிகழும் உண்மை நிகழ்ச்சிக்கும் பண்டுதொட்டு உண்மையறிவினர் கூறிவரும் எல்லா உண்மையுரைக்கும் முற்றும் முரணாய் முடிதலானும் அங்ஙனங் கடவுள் வாய் முதலான உறுப்புக்களினின்றே நால்வகை மக்கட்பிரிவினரையுந் தோற்றுவித்தானென வரை யறைகடந்து பேசுதல் பெரிதும் ஏதமாமெனக் கூறிவிடுக்க. அதனால், அந்நால்வகை மக்கட்குரிய நால்வேறு தொழில்களை உணர்த்துதற்கே உருவக வகையால் இறைவன்றன் வாய் முதலிய உறுப்புகளினின்று அந் நால்வருந் தோன்றினாரென அப் புருடசூத்தவுரை மொழியலாயிற்றென அதற்குப் பொருந்து மாறு பற்றிப் பொருளுரைத்துக் கொள்க.

இட

அங்ஙனமாயின், மேல்கீழ் என்னும் உயர்வுதாழ்வுகளை உணர்த்துதற்கே, அஃது அங்ஙனம் உருவக வகையால் மேலுறுப்பாகிய வாயினின்று பார்ப்பனரும் ஏனைக் கீழ் உறுப்புகளாகிய தோள் தொடை அடிகளினின்று ஏனை யோருந் தோன்றினர் எனக் கூறிற் றென்றாற் படும் இழுக்கென்னையெனிற்; புலால் நாற்றம் வீசும் மக்களின் உடம்புகள் வினைகளை நுகருதற்பொருட்டு மாயையில் அமைத்துக் கொடுக்கப்பட்டனவாகலின், இவ்வுடம்புகளிற் பொருந்திய மேலுறுப்புகளை உயர்ந்தனவென்றும், மலக் கழிவுகளுக்கு இ மான கீழ் உறுப்புகளைத் தாழ்ந்தன வன்றுங் கூறுதல் ஒக்கும். மற்று எல்லாம் வல்ல இறைவனது திருவுருவமோ அங்ஙனம் பிறரொருவரால் மாயையினின்று ஆக்கப்படுவது அல்லாமையினாலும், அவன் தன் அன்பர்க்குப் புலப்பட்டுத்தோன்றி அருள்செய்தற்கு நினைந்தவளவானே அஃது அவ்வருள்நினைவிற் றோன்றி மின்னொளியினும் மிக்க பேரொளியும் நுண்மையுந் நுண்மையுந் தூய்மையும் வாய்ந்ததாய் மறைவதொன்றாகலானும், அப்பெற்றித்தாகிய அவனது தூய அருளுடம்பில் ஓர் உறுப்பினை உயர்ந்ததென்றலும் மற்றை ஓர் உறுப்பினைத் தாழ்ந்ததென்றலும் ஒருவாற்றானும் ஒவ்வா. பைம்பொன்னினாற் சமைக்கப்பட்ட ஒருபாவை மேல்கீழ் இடமெங்குஞ் சுடர்விடு பொன்வடிவாயே விளங் குதல்போலவும், தூய கன்னற்பாகினால் வார்த்தமைக்கப் பட்ட ஒரு பாவையின் உடம்பெங்குந் தித்திக்கும் இயல் பிற்றாகவே இருத்தல் போலவும் இறைவனது உடம்பு முழுதும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/100&oldid=1591764" இலிருந்து மீள்விக்கப்பட்டது