உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் 29 -

தூய்மைத்தாய் விளங்குமல்லாமல், அது தன்னிலே உயர்வு தாழ்வுகள் உடைத்தாய் இருப்பதன்றென உணர்ந்து கொள்க. ஆகவே, இறைவனது மேலுறுப்பிற் றோன்றினாரென்பது பற்றிப் பார்ப்பனரை மேலோர் என்றலும், கீழுறுப்பிற் றோன்றினாரென்பது பற்றி ஏனை மூவரைக் கீழோர் என்றலும் சிறிதும் ஒவ்வா, அந்நால்வரும் இறைவனுடைய நால்வேறு ய றுப்புகளிற் றோன்றினார் என்றது, அந் நால்வகுப்பார்க்குந் தனித்தனியே சிறப்பாக உரிய நால்வகைத் தொழில்களை உணர்த்தியபடியாம்; இதுவே அப் புருடசூத்த உரையின் உண்மைப் பொருளென்று கடைப்பிடிக்க. மேலும், இந் நால்வகுப்பினரும் இறைவன் ஒருவனிடத்தே நின்று தோன்றினவரென்பது அதனுள் விளக்கமாகச் சொல்லப் பட்டிருத்தலின், அவர்கள் ஒரு தந்தைக்குப் பிறந்த மக்களேயாவ ரென்பதும், அதனால் அவர்தமக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் சிறிதும் ஏலாதென்பதும் கருத்திற் பதிக்கற்பாலனவாகும். இந்நால்வகை மக்கட்பிரிவினரின் பெயரை அவ்வவர் தொழில் வேறுபாடு பற்றி எடுத்தோதும் பதிகம் இப்புருடசூத்த மந்திரத்தைத் தவிர வேறேதும் இருக்குவேதத்தில் எங்குங் காணப்படாமை யானும், ஒன்பதாஞ் செய்யுளில் இருக்கு எசுர் சாமம் என்னும் மூன்றுவேதங்களின் பெயரை எடுத்துச் சொல்லும் இப்புருட சூத்தம் அம்மூன்று வேதங்களுந் தோன்றிய பின்னன்றி முன்னிருந்தது ஆகாமையானும், நால்வேறு மக்கட் பாகுபாடும் அதனையெடுத்துக் கூறும் புருடசூத்தமும் இருக்கு எசுர் எசுர் சாமம் சாமம் என்னும் மூன்று வேதங்களும் இயற்றப் பட்ட காலத்தில் இருந்தன அல்ல என்பதும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

னி, மாபாரதப்போரில் முனைந்துநின்ற குருகுல பாஞ்சால அரசர்களையும், அவர் வழியில்வந்த ஜனகன், அஜாதசத்துரு, ஜனமே ஜயபரிக்ஷித், இவற்கு ஆசிரியனாகிய வைசம்பாயனன் முதலியோரையும் எடுத்தோதும் கிருஷ்ண சுக்லயஜுர் வேதமும் அதனோடு ஒரு காலத்ததாகிய சாமவேதமும் அம் மாபாரதப்போர் நிகழ்ந்ததற்குப்பின் ஆக்கப்பட்டனவாதல் தெளிப்படும். இவ்விரண்டு வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தை யடுத்தே, அவ் வேதங்களுக்கு விளக்கஉரைகளாய் எழுந்த 'பிராமணங்க'ளும், அவற்றை யடுத்தே வேள்வி வேட்டலை மறுத்து முழுமுதற்கடவுளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/101&oldid=1591765" இலிருந்து மீள்விக்கப்பட்டது