உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் - 29

யிருக்கின்றேமாகலின் அதனை அங்கே கண்டுகொள்க; ஈண்டுரைப்பிற் பெருகும்.

இனி, இத் தென்றமிழ்நாட்டிலுள்ள சைவ வேளாளர்கள் உண்மையில் ஆரியப்பார்ப்பனர்க்கு மேலான வழக்க ஒழுக்கங்களையுடைய உயர்ந்த சாதியாராயிருந்தும், தமக்கு

உரிய

உலகப்

அருள் ஒழுக்கத்தையும் கல்விப்பயிற்சியையும் ஆராய்ச்சியுணர் வினையும் அறவே கைவிட்டு, இங்கே பிழைக்கவந்த அவ்ஆரியப் பார்ப்பனர் கட்டிச் சொல்லிய பொய்க் கதைகளிற் சிக்குண்டு, தமக்குள்ள செல்வத்தை யெல்லாம் அவர்கட்கும் அவர்கள் காட்டிய பொய்ம்மாய இன்பங்கட்கும் அளவின்றிச் செலவிட்டுத், தமக்குப் பலவகையான பயன்படுங் கைத்தொழில்களைச் செய்து கொடுத்துத் தம்மைச் செல்வத்திற் புரளவைத்த பதினெண் தொழில்புரியும் அருமைத் தமிழ்மக்களையெல்லாந் தம்மினுந் தாழ்ந்தசாதியாராக இழிபுபடுத்தித், தம்மை அவரெல்லாரினும் உயர்ந்த சாதியாராகக் கருதி இறுமாந்து, அவ்வாரியப் பார்ப்பனரை மட்டுந் தம்மினும் மேலான சாதியாராகப் பிழைபட நினைந்து சைவ வேளாளர்கள் தம் முன்னோரது அருள் ஒழுக்கத்திற்கு முற்றும் மாறாக நடக்கப்புகுந்த காலந்தொட்டே இழிந்த சூத்திரராயினார் கண்டீர்! தமக்கு உதவிசெய்யுந் தொழிலாளரைத் தாம் இழிந்த சாதியாராக நினைந்து தருக்கி அவர்கட்குப் பல கொடுமைகளைச் செய்தமையா லன்றோ சைவ வேளாளராகிய தாமும் ஆரியப் பார்ப்பனரால் இழிபு படுத்தப்பட்டு இழிந்த சூத்திரராயினார்!

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும்

என்னும் பொய்யாமொழி ஒருகாலும் பொய்படாதன்றோ!

பதினெண்வகைத் தொழில்களைச் செய்து தருவாரான கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பார், பாகர், பறையர் என்போர் தத்தந் தொழில்களைச் செவ்வனே செய்து தருதலாலன்றோ வேளாளரும் வேளாளரும் அரசரும் அந்தணரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/121&oldid=1591786" இலிருந்து மீள்விக்கப்பட்டது