உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

97

இனிதுயிர்வாழ்கின்றனர். உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத க் கைத்தொழில்களைச் செய்து தந்து நாம் துன்பமின்றி இன்பமாய் நன்குவாழ உதவிபுரியும் அருந்தமிழ் மக்களாகிய நம் உடன்பிறப்பினரையும் அவர் இயற்றும் அத் தொழில்களையும் இழிபுபடுத்தி நினைத்தலுங் கூறுதலுந் தெய்வத்திற்கு

அடுக்குமா? இவர்கள் தாந்தாஞ் செய்யுந் தொழில்களைச் செய்யாது கைவிட்டு வறிதேயிருந்தால், தம்மைச் சைவ வேளாளர் என்றும், க்ஷத்திரிய ரென்றும் பிராமண ரென்றுஞ் சொல்லி இறுமாந்து திரிவோர்தம் இறுமாப்பு எவ்வாறாகும்! இவர் தம் சாதியுயர்வெல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோமன்றோ! இருக்குவேத காலத்தில் ஒரு குடும்பத்தாரிலேயே பற்பல தொழில்களைச் செய்வாரிருந் தனரென்பது நன்கு ருக்குவேத ஒன்பதாம்

காட்டப்பட்டிருக்கின்றது. மண்டிலத்தில் (112, 3)

நன்

“யான் பாடல்களைச் செய்கின்றேன், என் தந்தையோ ஒரு மருத்துவன், என்தாயோ திரிகையில் தானியங்களை அரைக்கின்றாள். செல்வத்தைப் பெறுதற்பொருட்டாகப் பலவேறு சூழ்ச்சிகளால் ஆக்களைப்போல யாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கின்றோம்." எனப் போந்த பாட்டினால் ஒரு குடும்பத்தினரே பல தொழில்களைச் செய்து உயிர்வாழ்ந்தமை பெறப்படுதல் காண்க. இவ்வாறு பண்டை

நாளில்

ஒரு குடும்பத்தினரே உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் பற்பல தொழில்களைச் செய்து தம்முள் ஏதும் வேற்றுமையின்றி நன்கு உயிர்வாழ்ந்து வந்தமைபோல, இப்போதும் பயன்படும் பற்பல அரியபெரிய கைத்தொழில்களைச் செய்துவரும் வகுப்பினர் பற்பலரும் அங்ஙனமே தம்முள் உயர்வுதாழ்வு காணாது ஒருமித்து அளவளாவி உயிர்வாழப் பழகுவராயின் நம் இந்தியநாடும் இந்திய மக்களும் எவ்வளவு சிறந்த நிலையை அடைகுவர்! வெள்ளைக்கார நன்மக்கள் தாந்தாம் வேண்டிய பல்வேறு பயன்படுந் தொழில்களைச் செவ்வையாகச் செய்துகொண்டு, அத்தொழில்களையாவது அத் தொழில்களைச் செய்யுந் தம் மினத்தவரையாவது ஒரு சிறிதும் இழிபாக நினையாது, எல்லாரையும் ஒத்த இயல்பினராகவே கருதி உண்ணல் கலத்தல்களில் ஏதும் வேறுபாடின்றி ஒருங்கு அளவளாவி

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/122&oldid=1591787" இலிருந்து மீள்விக்கப்பட்டது