உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் - 29 -

குடும்பத்தாரைப் போல் வாழ்ந்துவருதலாலன்றோ, அவர்கள் கல்வியிலுஞ் லுஞ் செல்வத்திலும் நுண்ணுணர்விலும் ஆற்றலிலும் இன்பத் திலும் மேம்பட்டு இவ்வுலகின்கண் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றிப், பெரும்பாலும் ஏனையோரை யெல்லாந் தங்கீழ்ப்படுத்துத், தாம் அவர்க்கு மேலாய்த் தேவரைப்போல் விழுமியராய் வாழ்கின்றனர்! மற்று, நம் இந்தியமக்களோ தம்முட் பல்வேறு பயன்படுதொழில்கள் செய்வாரையும் அவர் செய்யும் அத்தொழில்களையுந் தாந்தாமே இழிபுபடுத்திக் காண்டு, அதனால் ஒருவர்க்கொருவர் அன்பும் ஒற்றுமையும் இன்றிப், பொறாமையும் சூதும் வஞ்சமும் மிக்க அழுக்கு நெஞ்சினராய்க், கல்வியும் அறிவும் ஆற்றலும் இன்பமும் அற்றுக், கவலையும் வறுமையுந் துன்பமும் மிகுந்து, பொய்க் கதைக்கும் அறியாமைக்கும் அடிமைகளாகி, அதனால் நரகவாழ்ககையாக்கி அலகை களைப்போற் காலங்கழிக்கின்றனர்! ஐயோ! நம் இந்திய மக்கள் நல்லறிவும் ஒற்றுமையும் பெற்று முன்னேற்றம் எய்தும் நாள் எந்நாளோ! அறிகிலம். அதுகிடக்க.

இவ்வுலகவாழ்க்கையை

மேற்கூறியனவெல்லாம் ஒக்கும்; சைவவேளாளர் சூத்திரர் அல்லராயின் அவரைப் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் என்னும் மற்றை மூவகையில் எதன்கண் அடக்குதல்வேண்டும் எனின்; அம்மூவரினும் அவர்க்கு மேற்பட்ட நிலையினும் வைகிய பழைய சைவ வேளாளரை அம்மூவகுப்பில் மட்டும் அடக்குதல் பொருந்தாது. பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால்வகைப்பிரிவும்பெயரும் ஆரியக் குருமார் எழுதிய தரும சூத்திரங்களினும் மிருதிநூல்களினும் மிகுதியாய்க் காணப் படினும், அவை ஆரியர்க்கே உரியன அல்ல. இவ் இந்திய நாட்டுக்குப் புறம்பே இருந்த காலத்தும் அதன்பின் இதற்குட் புகுந்து முதன்முதற் குடியேறிய காலத்தும் ஆரியர்க்குள் அத்தகைய தொரு பிரிவு இருந்தது உண்மையாயின், அவர்கள் அக் காலங்களிற் பாடிய இருக்குவேதப் பாடிய இருக்குவேதப் பாட்டுகளில் அந்நாற்சாதிப் பிரிவு சொல்லப்பட்டிருத்தல் வேண்டும்; மற்று அஃது அவ் இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங்களில் ஓரிடத்தாயினும் ஓர் எட்டுணையேனும் சொல்லப்படாமை யினை மேலே விளக்கிக்காட்டினே மாகலானும், ஆரியருள் ஒவ்வொரு குடும்பத்தாரும் பற்பல தொழில்களைச் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/123&oldid=1591788" இலிருந்து மீள்விக்கப்பட்டது