உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

121

வாழ்ந்துவந்தமை நன்கு புலனாகாநிற்கும். மருதநிலத்து வேளாண்டலைவன் குறிஞ்சி நிலத்து வேட்டுவப் பெண்ணை மணம் புரிந்துகொண்ட வழக்கம் முற்காலத்தில் இருந்ததனை

மாணிக்கவாசகப் பெருமான்,

“தெங்கம் பழங் கமுகின் குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத் தொளிர் நாட்டினைநீ, உமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச் சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமிஎந் தேமொழியே”

என்று திருச்சிற்றம்பலக்கோவையாரில் (100) அருளிச் செய்திருத்தல் கொண்டு உணர்க. இதுபோலவே, நெய்தல் நிலத்துப் பரதவர்குடிப் பெண்ணை வேளாண்டலைவன் L மணந்துகொண்டமைக்குச் சந்தநு மன்னன் மச்ச கந்தியை மணந்தமையும் (மாபாரதம்), சிவபிரான் பெயர்பூண்ட ஒரு பாண்டிய மன்னன் ஒரு ரு செம்படவப் பெண்ணை மணந்தமையுமே (நம்பியார் திருவிளையாடற் புராணம்) சான்றாம். இங்ஙனமே முல்லை நிலத்து ஆயர்தலைவன் மகளை மருதநிலத்தலைவன் மணந்தமுறை,

“படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண் இடையார் மெலிவுங்கண் டண்டர்கள் ஈர்முல்லை வேலிஎம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட்டார் வியன்றென்புலியூர் உடையார் கடவி வருவதுபோலும் உருவினதே”

(136)

தங்கை

போந்த திருச்சிற்றம்பலக்கோவையார் திருப்பாட்டானும், அருச்சுனன் ஆயர் தலைவனான கண்ணன் சுபத்திரையை மணந்த வரலாற்றானும் அறியப்படும். இவ்வாறு இழிந்த ஒழுக்கமுடைய இழிந்த சாதியார்க் குள்ளும் உயர்ந்த ஒழுக்கமும் இயல்பும் உடையராய் வருவாரைப் பண்டை வேளாளர் தம்மினத்திற் சேர்த்துக் கொண்டு வாழ்ந்த வரலாறுகளை உற்று ஆராயுங்கால், அவ்வவர்பாற் காணப் படும் உயர்ந்த இயல்புகள் பற்றியே சாதியுயர்பு உண்டாய தல்லாமற் பிறப்பளவில் அஃது உண்டாகவில்லை யென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்குவிளங்கும். உயர்ந்த செயலும் இயல்பும் வாய்ந்த குடிமக்களில் இழிந்த செயலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/146&oldid=1591812" இலிருந்து மீள்விக்கப்பட்டது