உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் - 29 -

இயல்பும் உடையார் தோன்றுவராயின் அவரை இழிந்தோ ரென்றும், இழிந்தசெயலும் இயல்புமுடைய குடியில் உயர்ந்த செயலும் இயல்பும் உடையார் தோன்றின அவரை உயர்ந்தோ ரென்றும் நம் தமிழ்மக்கள் கொண்டாரென்பதற்கு,

“ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்”

“மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்

(44, 3)

கற்றார் அனைத்திலர் பாடு”

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

وو

கற்றாரோடு ஏனை யவர்

(41,9)

(41, 10)

என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்தமையே சான்றாம். பண்டைக் காலத்திருந்த தமிழ் வேந்தர்களுங், கல்வியிலும் பிறநலங்களிலும் உயர்ந் தோரையே உயர்ந்தோரெனக் கொண்டு காண் பாராட்டின ரல்லாமற், பிறப்பளவில் எவரையும் உயர்ந்தோரெனக்

காண்டில

ரென்பதற்கு, ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்,

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே,

பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும், ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும், வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளுங் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே"

என்று' ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய செய்யுளே சான்றாம்.

இவ்வாறாக,

உயர்ந்தோர் தாழ்ந்தோராதலும்,

தாழ்ந்தோர் உயர்ந்தோராதலும் அவ்வவர்பாற் காணப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/147&oldid=1591813" இலிருந்து மீள்விக்கப்பட்டது