உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

123

இழிந்த இயல்பு செயல்கள், உயர்ந்த இயல்பு செயல்கள் பற்றியே யல்லாமல், வெறும் பிறப்பளவில் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று கூறுதற்கு வேறு ஏதோர் அடை யாளமும் உண்மைபற்றியன்றாம். ஏனெனிற், பிறப்பளவில் நோக்கினால், மக்கள் எனப்படுவார் எல்லாரும் புலால்நாற்றம் வீசும் ஊனுடம்பு வாய்ந்தவர்களாகவே யிருக்கின்றனர்; அவர்க்குள்ள அவ்வூனுடம்புதானும் ஒன்பது வாயில்களிலுங் கசியும் மிக அருவருப்பான மலம் நிறைந்ததா யிருக்கின்றது; அவ் வுடம்பிற் புண் உண்டானாற் சீழும்

சந்நீரும் வடிகின்றன, புழுக்கள் நெளிகின்றன, பார்ப்பாருடம்பும் இவ்வியல்பினவே, அரசர் வேளாளர் உடம்பும் இவ்வியல்பினவே, பறையர் உடம்பும் இவ்வியல் பினவே; சிலகாலம் உயிரோடிருக்கையிலும் இவ்வுடம்பு திரைத்து மூத்து வலிவுகுன்றிப்போகின்றது; அவ்வுயிர் போனபின் அவ் வுடம்பு மண்ணிற் புதைக்கப்பட்டு மண்ணாய் விடுகின்றது, அல்லது நெருப்பிலிட்டு நீறாக்கப்படுகின்றது. வ்வியற்கை எல்லாருடம்புகட்கும் பொதுவாயிருத்தலால், ஆசிரியர் திருவள்ளுவர், ‘பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும்” என்று அருளிச் செய்தார். ஆகையால், வெற்றுடம்பை மட்டுங் கண்டு இது பார்ப்பாருடையது, இது மன்னருடையது, இது வேளாளருடையது, இது பறையருடையது என்று கூறுதல் து லாது. மேல் உடுத்த உடைகளையும், பூணூல் உச்சிக் குடுமிகளையும் களைந்துவிட்டால் இவர் பார்ப்பனரென்று அறிதல் ஏலாது; இங்ஙனமே அரசர் வேளாளர் பறையர் முதலானோர் தாந்தாம் வேற்றுமை தோன்ற அணிந்திருக்கும் அடையாளப் பொருள்களை அகற்றிவிட்டால் அவர்களை ன்னாரென்றறிந்து கொள்ளுதல் எவர்க்கும் எவர்க்கும் ஏலாது. இவ்வாறு மக்களுள் இவர் இன்ன சாதியார் இவர் இன்ன சாதியார் அல்லர் என்று இனம் பிரித்துகாட்டல் இயற்கையில் இயலாமைபற்றியே, அஃகி அகன்ற செந்தமிழ்த் தொல்லா சிரியராகிய தொல் காப்பியனார் 'சாதி' என்னுஞ்சொல்லை மக்கட்பிரிவினர்க்கு இட்டு வழங்காமல், தம்முன் இனம் இனமாக இயற்கை யிலேயே வேற்றுமைகாட்டும் சிற்றுயிர்ப் பிரிவுகளுக்கு அச்சொல்லை இட்டு வழங்கினார். அவர்,

யல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/148&oldid=1591814" இலிருந்து மீள்விக்கப்பட்டது