உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

237

திருக்கோயில்களையும் அவற்றின்கட் டமிழ் மேன் மக்கள் செய்து போதரும் வழிபாடுகளையுங் காணப்பெறாத வேற்றுநாட்டார் ஒருவர் தமிழர்க்குரியது இழிந்த சிறுதெய்வ வணக்கமே என்று கூறிடுவராயின், தமிழ்மேன்மக்கள் அவரது மடமைக்கிரங்கி அவரை நகையாதொழிவரோ? இங்ஙனமே பண்டைத் தமிழ் மேன்மக்கள் இழித்துரைக்கும் இப் போலித் தமிழர் கூற்றும் நகையாடி விடுக்கற் பாலதாம் என்க.

பண்டைநாளில் தமிழ்மக்களால் வணங்கப்பட்ட தெய்வங் களுள்ளும் அத் தெய்வங்கள் உறையுங் கோயில்களுள்ளுஞ் சிவபிரானும் அவனுறையுந் திருக்கோயிலுமே முதன்மையாக வைக்கப்பட்ட உண்மைக்குப்,

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும்

மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்"

எனச் சிலப்பதிகாரத்திற்' சிவபிரான் கோயில் முதலிலும், இந்திரன் கோயில் கடையிலுங் கூறப்பட்டிருத்தலே சான்றாம். இதனோடு ஒப்பவே மணிமேகலையிலும்,

“நுதல்வழி நாட்டத்து இறையோன் முதலாப்

பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக

992

என்று சிவபிரானே முழுமுதற் கடவுளாக முதற்கண் வைத்து ஓதப்பட்டிருத்தல் காண்க.

அஃதொக்கும், இந்திரன் வருணன் முதலான ஆரியர்க் குரிய தெய்வங்களைப் பண்டைக் காலத்திலேயே தமிழ் மக்களும் வணங்கலாயினது என்னையெனின்; ஆரியர் வணங்கிய இந்திரனுந் தமிழர் வணங்கிய இந்திரனும் ஒருவர் அல்லர். ஆரியர்க்குரிய இந்திரன் இடி மழை மின்னல்

முதலியவற்றிற்குரிய தெய்வமாதலோடு அவர்தம் பகைவரோடு போராடுங்கால் அவர்க்கு உதவியுந் துணையுமாய் நின்று அவர்க்கு வெற்றியைத் தருபவனாகவும், அவர் தருஞ் சோமச் சாற்றையும் விலங்கி னிறைச்சியையும் நிறைய உட்கொண்டு அவர் வேண்டிய நலங்களையெல்லாம் அவர்க்கு விளைப்பவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/262&oldid=1591958" இலிருந்து மீள்விக்கப்பட்டது