உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

னாகவுஞ்

மறைமலையம் - 29

சால்லப்படுகின்றான். தமிழர் வணங்கிய இந்திரனோ வயலும் வயல்சார்ந்த இடமுமாகிய மருதநிலத்தில் உள்ள உழவர்களால் மழையின் பொருட்டு மட்டும் வேண்டி வணங்கப்பட்ட மழைக் கடவுள் ஆவன்; மழையின் பொருட் டாகவன்றி வேறெந்த நன்மைப் பேற்றின் பொருட்டாகவேனுந் தமிழர்களால் அவன் வணங்கப் பட்டவன் அல்லன். இருக்கு வேதத்திலுள்ள பாட்டுகளில் மூன்றில் ஒரு கூறு இந்திரன் மேற் செய்யப்பட்டிருத்தல் போலத் தமிழ் நூல்களில் எங்கும் ஒரு பாட்டேனும் இந்திரன் மேற் செய்யப்படவில்லை.

பழந்தமிழ் நூல்களில் உள்ள

வணக்கச் செய்யுட்

க ளல்லாஞ் சிவபிரான் மேலும் முருகக்கடவுள் மேலுந் திருமால் காடுகிழாள் முதலான ஏனைச் சில தெய்வங்கண் மேலுமே பாடப் பட்டனவாய் இருக்கின்றன. அதுவேயு மன்றித், தொல்காப்பியம் முதலான மிகப்பழைய தமிழ்நூல் களில் ‘இந்திரன்' என்னுஞ் சொல்லே காணப்படவில்லை. மருதநிலத்து மக்களாற் மக்களாற் கொண்ட கொண்டாடப்படுந் தெய்வம் 'வேந்தன்' என்று சொல்லப்படுகின்றது; 'வேந்தன்மேய தீம்புனல் உலகமும்" என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதல் காண்க. தமிழர் மழையை வேண்டி வணங்கிய ‘வேந்தனும்’ ஆரியர் மழையின் பொருட்டாகவும் வணங்கிய ‘இந்திரனும்’ மழைக் கடவுளாதல்பற்றிப் பிற்காலத்தவரால்

அவ்விருவரும் ஒருவராகக் கொள்ளப்படுவாராயினர்.

அவ்வாறு கொள்ளப்படினுந் தமிழர்க்குரிய வேந்தனுக்கும், இருக்குவேத ஆரியர்க்குரிய இந்திரனுக்கும் ஏதோர் இயைபும் இல்லையென்பது அவ்விருவர்தம் பழைய நூல்களையும் நன்காராய்ந்து பார்க்கும் நடுநிலையாளர்க்கும் நன்கு விளங்கும். பிற்காலத்துப் புராண நூல்களிற் சொல்லப்படும் இந்திரனுக்கும் இருக்குவேதத்திற் சொல்லப்படும் இந்திரனுக்குங் கூடச் சிற்சில வகைகளிற் றவிர மற்றப் பல வகைகளில் ஏதோர் ஒற்றுமையும் இல்லை.

உற்று ஆராயுங்கால் தமிழர்க்குரிய 'வேந்தன்' என்போன், தமிழர்க்குள் முதன்முதற் றலைவனய்த் தோன்றி, மழைபெய்யுங் காலமும், அம் மழையினுதவியாற் பயிர் செய்வதற்கேற்ற வளவிய நிலமும் அந் நிலத்தைத் திருத்திச் செவ்வனே பயிர் விளைக்கும் வகைகளும் நன்குணர்ந்து உழவுதொழிலைக் கற்பித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/263&oldid=1591960" இலிருந்து மீள்விக்கப்பட்டது