உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் 29 -

வொழுக்கங்களையுங் கடவுள் வழிபாட்டினையும் ஒரோ விடத்து இகழ்ந்து கூறியும் பிழைபடுவர். ஆயினும், அது பற்றி அவர் இகழப்படார். ஏனெனில் நம் இந்தியநாட்டுப்

புலவர்போற், செருக்கும் பொய்ப்பற்றும் உடையராய் நூற்பொருள்களை தத்தமக்கு வேண்டியவாறே திரித்து உரையாமல், அவ்வறிஞர் தாம்செய்யும் நடுநிலை ஆராய்ச்சியில் தாம் அறிந்தவற்றை அறிந்தவாறே திறப்பாக வெளியிட்டு உண்மைவளர்ச்சிக்கு இடஞ்செய்தலான் என்க.

66

'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்று தெய்வத் திருக்குறள் கட்டளையிடுமாறே, வெள்ளைக் காரரேனும் இந்தியரேனுங் கூறுவனவற்றை நடுநின்று ஆராய்ந்து எவர் கூற்றில் எஃது உண்மையோ அதனைக் கைக்கொள்ள வேண்டுவதாயிருக்கப், பல்வகை நுண்ணிய ஆராய்ச்சியிலுஞ் சிறந்து விளங்கிவரும் வெள்ளைக்காரர் கூறும் உறுதிப் பொருள்களை இகழ்ந்து, அவருடைய ஆராய்ச்சியிலும் அறிவிலும் ஒரு தினையளவு கூட இல்லாத நம் இந்திய மக்களிற் பெரும்பாலார் தம்மைத் தாம் உயர்த் துரைத்தல், “கூவல் ஆமை குரை கடல் ஆமையைக் கூவலோடு ஒக்குமோ கடல்” என்று கூறுதற்கே ஒப்பாம்.

இந்தியர் கல்லை வணங்குகிறார்களென்று வெள்ளைக் காரர் அவரது கடவுள் வழிபாட்டை இழித்துரைப்பதாக மாயாவாதியார் கூறினார்; வெள்ளைக்காரர் எல்லாரும் அங்ஙனம் இகழ்ந்து கூறுபவர் அல்லர். மாக்ஸ்மூலர் பல இடங்களில் இந்தியர் கல் முதலிய திருவுருவங்களிற் செய்யும் வழிபாட்டின் கருத்தையும் மேன்மையையும் நன்கு விளக்கியிருக்கின்றனர்.' அமெரிக்காவிற் பேரறிஞராய் விளங்கிய உவில்லியம் ஜேம்ஸ் என்பவர் திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமையை வற்புறுத்திப் பேசி இருக்கின்றார்.2 ஆதலால், இம் மாயாவாதியார் கூற்று வெறும் பொய்யேயாம். இம் மாயாவாதியாராற் கொண்டாடப்படுந் தயாநந்த சரசுவதி சுவாமிகள் நம்மனோர் பண்டுதொட்டுச் செய்து போதருந் திருவுருவ வழிபாட்டைப் பெரிதும் இகழ்ந்து ஒதுக்கவில்லையா? தயாநந்த சரசுவதி வடமொழியில் வல்லரேனுந்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/269&oldid=1591972" இலிருந்து மீள்விக்கப்பட்டது