உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நூல்

வேளாளர் நாகரிகம்

245

உணர்ச்சியில்லாதவராகலின், தம்முடைய ய கோட்பாட்டுக்கு இணங்க இருக்கு வேதப்பாட்டுகள் பலவற்றின் உண்மைக் கருத்தைத் திரித்துத் தாம் வேண்டியவாறே

அவற்றிற்கு உரைகள் எழுதினார்; அவர் தமிழராற்

செய்யப்பட்ட வடமொழிச் சாங்கியநூல் உணர்ச்சிகொண்டு சைவசித்தாந்தத்தோடு ஒத்த கோட்பாடுகளைக் கண்டறிந்து,

சங்கராசிரியர் கட்டிய மாயாவாத வேதாந்தத்தைத்

தகர்த்தெறிந்த பேரறிஞரே யாயினுந், தமிழ் நூலுணர்ச்சியுந் தமிழரின் நுண்ணறிவு விழுப்பமும் அறியாதவராகலின் ரோவிடங்களிற் சைவ சித்தாந்தத்திற்கு ஒவ்வாதவற்றையுங் கூறி இழுக்குவர். ஆதலால், தயாதந்த சரசுவதிசுவாமிகள் கூறுவனவெல்லாம் ஆராயாமற் கைக்கொள்ளற்பாலன அல்ல.

இனிப், 'பிரம சமாசத்தைத்’ தோற்றுவித்த ராசாராம் மோகன்ராய் என்பவர் வடமொழிநூல்களில் மிக வல்லுநரா யிருந்துந் தமிழ் நூலறிவு பெறாதவராகலின், அவரும் நம்மனோர் செய்யுந் திருவுருவ வழிபாட்டைஇகழ்ந்தொதுக்கவில்லையா? நம் இந்திய நாட்டவரிலேயே இங்ஙனம் நாம்செய்யுந் திருவுருவ வழிபாட்டை இகழ்பவர் பலராயிருக்க,வெள்ளைக்கார அறிஞரே அதனை யிகழ்பவர் என்று அவர் மேற் பழி சுமத்துவது பெரிதும் ஏதமாமென்க. எனவே, பல்வகை நூல் உணர்ச்சியிலும்மிக்காராய், அவ்வுணர்ச்சி வலியால் உலகத்திற்குப் பல அரும்பெரு நன்மைகளை விளைத்துவரும் வெள்ளைக்கார அறிஞரின் நடுநிலையாராய்ச்சி யுரைகள் நம்மனோராற் பெரிதுங் கைக்கொள்ளத் தகுவனவே யல்லாமல் இகழ்ந்தொதுக்கற் பாலனவல்ல வென்று கடைப்பிடிக்க.

அடிக்குறிப்புகள்

1. Max Muller, Muir, Taylor, Weber, Ragozin, Criffith Macdonell.

2.

Prof. Max Muller's ‘Six Systems of Indian Philosophy, p.216’

3.

Prof. W. James, 'The Varieties of Regligious Experience', Lecture XIX

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/270&oldid=1591974" இலிருந்து மீள்விக்கப்பட்டது