உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

L

247

மிகப்பழையன வற்றிற்குரிய பழைய ஆரியர்க்குக் கற்பிக்கப்பட்ட உருத்திரர் சீகண்ட உருத்திரரே யல்லாமற் சிவபெருமான் அல்லர் என்பதற்கு, அவர்மேற் பாடப்பட்ட பழைய இருக்கு வேதப் பாட்டுகளில் எங்கும் அவர்க்குச் சிவன் என்னும் பெயர் சொல்லப்படாமையே சான்றாம். அப் பழைய ஆரியர் தாழ்ந்த மனநிலையுடையரா யிருந்தமையின், அவர்க்கு அறிவுறுத்தப் புகுந்த தமிழ்ச்சான்றோர் சீகண்டருத்திரர்க்கு மேற்பட்ட கடவுள் நிலையை உணர்த்துதற்கு ஒருப்பட்டிலர். சீகண்டருத் திரர்க்கு மேற்பட்ட ‘மகேசுவரர்' 'சதாசிவர்' முதலிய தலைமைக் கடவுளரை யாதல், அவர்க்கும் மேற்பட்டு எப்பொருளுங் கடந்து நிற்குஞ் சிவத்தையாதல் இருக்கு வேதப் பழம்பாட்டுகள் சிறிதும் உரையாமையே இதற்குச் சான்றாம்

என்க.

அற்றன்று, இருக்குவேத காலத்திருந்த தமிழர் உருத்திரர்க்கு மேற்பட்டுச் சிவம் என்பதொன்று உண்டென்பதனை அறியார் எனக் கொள்ளாமோ வெனின்; இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின்கண் உள்ள இருபத்தோராவது பதிகத்திலும்,

பத்தாம் மண்டிலத்தின்கண் உள்ள தொண்ணூற்றொன்பதாவது பதிகத்திலும் அந்நாளில் தமிழ் நன்மக்கள் செய்து போந்த சிவலிங்க வழிபாடு குறிப்பிடப்பட்டிருத்தலின், அவர் சிவத்தை யறியார் என்பது பொருந்தாது. அந்நாளில் தமிழவேளாளர் செய்து போந்த சிவலிங்க வழிபாட்டின் பெருமையை ஆரியர் அறிந்து கொள்ளத்தக்க நுண்ணறிவு இலராய்இருந்தனர் என்பதே தேற்றமாம். அவ் வாரியர் அவ்விரண்டு பதிகங்களிலும் ஆண்குறித்தெய்வம்' என்று பொருள்படுஞ் 'சிசிநதேவர்' என்னுஞ் சொல்லால் அச் சிவலிங்கத்தை இழித்துரைத்த தோடு, அதனை வழிபடுந் தமிழ் நன்மக்களையுந் 'தாசர்கள்’ என வைதமையும் யாங்கூறும் இவ்வுண்மைக்குச் சான்றாம் என்க. எனவே, சைவ சித்தாந்த முடிபொருளாயுள்ள சிவத்தை உணர்த்தாத இருக்குவேதமும் அதன் வழிவந்த ஏனை ஆரியவேதங்களுஞ் சைவசித்தாந்தத்திற்கு மேற்கோள்களாகா வென்று உணர்ந்து கொள்க.

அற்றேல் இருக்குவேதத்தினின்றும் பிரித்தெடுத்துச் செய்யப்பட்டதாகிய எசுர் வேதத்திற் போந்த சதருத்ரியத்திற் 'சிவன்' என்னும் பெயர் காணப்படுதல் என்னையெனின்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/272&oldid=1591978" இலிருந்து மீள்விக்கப்பட்டது