உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

பாட்டிற்

-

மறைமலையம் - 29

எசுர்தேவம் ஒழுங்குபடுத்திய பிற்காலத்தில் ஆரியர் தாம் செய்து போந்த சிறுதெய்வ வணக்கத்தை மெல்ல மெல்லக் கைந்நெகிழ விட்டுத் தமிழ்ச்சான்றோர் அறிவுரைகளை ஏற்று உருத்திர வழிபாட்டைக் கைக்கொள்ளப் புகுந்தமையின், அவரை அவ்வுருத்திர வழிபாட்டினின்றும் மேலுயர்த்திச் சிவவழி காண்டு செல்லும் பொருட்டே, எப்பொருளுங் கடந்த சிவத்தின் பெயரை அவ் வுருத்திரர் மேல் வைத்து, அச் சத்ருத்ரியத்தினை இயற்றி அவ்வெசுர்வேதத்தில் முதன்மைபெற வைத்ததல்லது, ஆண்டு முழுமுதற் கடவுளான சிவத்தை அவர்க்கு உணர்த்தியபடி யன்றாம். இஃது எற்றாற் பெறுது மெனின்; அப்பகுதிக்குச் ‘சதருத்ரியம்' என உருத்திரச் சொல்வழியே பெயரமைத்தமையானும், அவ்வுருத்திரர்க்குரிய ‘நீலமிடறும்’, ‘சீகண்டர்' எனும் பெயரும் அதன்கட் சொல்லப் படுதலானும் பெறுதும் என்பது. அவ்வுருத்திரரின் கொடிய திருவுருவத்திற்கு மிக அஞ்சியிருந்த ஆரியர், இப்போதுதான் அஃது அன்புருவாதலுந் தீது செய்யாதது ஆதலுந் தெளிந்து,

6

"மலைகளில் எழுந்தருளுவோய், கொடியல்லாத இன்பவுருவினதுந், தீங்கு குறியாததும் ஆன நின் திருவுருவத்தோடும் எங்கள் மேல் துளங்கியருள்க என்று பொருள்படும் “யாதே ருத்ர சிவாதநூர் அகோர பாபகாசிநீ தயாநஸ்தந்வா சந்தமயா கிரிசந்தாபிசாக Yஹி” என்னும் வணக்கவுரையால் அச் சதருத்ரியத்தின் முதலிலேயே வழிபாடு செய்தல் காண்க; அவ்வுருத்திரர்க்கு அவ்வாரியர் மிக நடுங்கிய நடுக்கம் இன்னும் அவரது நினைவைவிட்டுத் தீர்ந்திலாமை இதிற் கண்டுகொள்க. இ இங்ஙனமே பின்னாளில் வரவர ஒழுங்குபடுத்து வேதங்களாகச் சேர்க்கப்பட்ட ‘அதர்வவேதப்’ பாட்டுகளிற் சீகண்டருத்திரர் வழிபாடு மிகுந்து வரலானமை, வரவரத் தமிழ வேளாளர் செய்து போந்த முதற்கடவுள் வழிபாட்டின் மேன்மையை ஆரியர் உணர்ந்து கொண்ட தனாலேயாம். சீகண்டருத்திரர் வழிபாட்டில் தொன்று தொட்டுத் தலைநின்றவர்கள் வேளாளரும், அவருள் அரசராகிய வேளிருமே யாவர் என்பது பண்டைத்தமிழ் ஆரிய நூல்களால் மேற்காட்டியவாறு விளங்குவதோடு, பின்றைக் காலத்தில் இவை தம்மை யெல்லாம் ஒருங்காராய்ந்துணர்ந்த ஆசிரியர் சேக்கிழார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/273&oldid=1591980" இலிருந்து மீள்விக்கப்பட்டது