உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

249

"நஞ்சையமுது செய்தவருக்,

கிம்பர்த்தலத்தில் வழியடிமை

என்றுங் குன்றா இயல்பில் வருந் தம்பற்றுடைய நிலைவேளாண் குலத்தில்””

என்று அருளிச் செய்யுமாற்றானும் நன்கு புலனாதல் காண்க. இருக்கு முதலிய நான்கு வேதங்களும் மாபாரதப் போர்க்குப் பின் ஒழுங்குபடுத்தப்பட்டமையினைப் பின்னே காட்டுதும்.

அங்ஙனமாயின், பின்றைக் காலத்துஞ் சைவசமய உண்மையை நிலைநாட்டிய மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் முதலான ஆசிரியன் மாருஞ் சிவ வழிபாட்னைஓதாது, சீகண்ட உருத்திரரையே வழிபட்டுப் பதிகங்கள் அருளிச் செய்தல் என்னையெனின்; மலர் மாயை வினை என்னும் மும்மலவயத்தாராய் நின்று பிறப்பு இறப்புகளிற் பட்டுழலும் நான்முகன் மால் இந்திரன் முதலிய ஏனைச் சிறு தேவர்கள் போலாது, இயற்கையே மலமாசு பெரிதுந் தேய்ந்து, சிவத்தின் தலைமைத்தன்மை (அதிகாரம்) தங்கட் பதியப்பெற்று அதன் அருட்பேற்றிற்கு முற்றும் உரியராய் நிற்குஞ் சீகண்டருத்திரர், சிவபெருமானுக்குரிய எல்லா அடையாளங்களும் உடைய ரெனவும், மனமொழிகளுக்கு எட்டா இயல்பினதாகிய சிவத்தை நினைத்தலும் வழுத்தலும் இந்நிலவுகத்துள்ளார்க்கு ஏலாமையின் அவர் சீகண்டருத்திரர்பாற் செய்யும் வழிபாடு களெல்லாம் முழுமுதற் சிவத்தையே சென்று சேருமெனவுஞ் சிவஞானபோதம் முதலிய சித்தாந்த நூல்கள் வலியுறுத்துக் கூறுதலிற் சைவசமயாசிரியர் சீகண்டருத்திரர் மேல் வைத்துக் கூறிய வழிபாடுகள் சிவத்தையே சாருமென்று ஓர்ந்துகொள்க. இஃது எதுபோலவெனின், நம்மையாளும் அரசர்க்கு நாம் நேரே செய்தற்கு இயலாமல், அவ்வரசர்க்கு ஈடாக நம்மெதிரே நமக்கு அணுக்கராய் நிற்கும் ஆட்சித்தலைவர்பால்' நாம் செய்யும் வழிபாடுகள் அவ்வரசரைச் சென்று சார்தல் போல வென்க. அங்ஙனம் ஆட்சித் தலைவர்பால் நமது வணக்கத்தைச் சலுத்துகின்றவிடத்தும், அஃது அவாக்கு முதல்வரான அரசரையே நினைத்துச் செய்யப்படுதல் போலச் சீகண்டருத்திரர்பாற் செய்யப்படும் வழிபாடுகளுஞ் சிவத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/274&oldid=1591982" இலிருந்து மீள்விக்கப்பட்டது