உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் - 29

இனி, மேற்கூறியவாறு இருக்குவேதம் முதலியன சாமானிய பௌதிக வழிபாட்டில் தலை நின்றனவாயினும், அவ்வேத முடிபான உபநிடதங்களும் சாங்கியம் வேதாந்த சூத்திரம் முதலியனவுமெல்லாம் உயர்ந்த தத்துவ நுண்பொருள் போதிக்கக் காண்டலின் ஆரியமக்கள் பிற்றைஞான்று பேரறிவுடையராயினா ரென்னாமோ வெனின்;- என்னாம். உபநிடத முதலான ஞானநூல்கள் ஆரியமொழியில் எழுதப் பட்டிருத்தல்பற்றி அவை ஆரியமக்களாற் செய்யப்பட்டன வென்றல் வழுவாம்.

பண்டைநாளில் தமிழ்மக்கள் வடக்கே இமயமலைச் சாரல்வரையிலும், மேற்கே ஆப்கானிஸ்தானம் வரையிலும் பரவியிருந்தனர். இதற்கு அறிகுறியாக இன்றும் ஆப்கானிஸ் தானம் பெலுசிஸ்தானம் என்னும் நாடுகளில் தமிழோடு மிக்க தாடர்புடைய பிராகி என்னும் மொழி வழங்கப்பட்டு வருகின்றது. இமயமலைச் சாரலில் வாழும் குன்றவர் களெல்லாரும் தமிழின் றிரிபான ஒரு மொழி வழங்கி வருகின்றனர். இதுவே யன்றி வடநாட்டிற் பழைய பல ஊர்களெல்லாந் தமிழ்ப் பெயர்பெற்று விளங்குகின்றன. 'தமிழூக்' என்னும் ஊர் வடநாட்டிலிருத்தல் யாருமறிந்த தான்றேயாம். இஞ்ஞான்றும் வடநாட்டி லிருப்போரிற் பெரும்பாலார் பண்டைக்காலத் தமிழ் மரபினரேயாவர். மொழி காலவேறுபாட்டால் வேறு படினும் மக்கள் சாதிப் பிறப்பு யாண்டும் ஒருதன்மையாகவே யிருக்கும். முன்நாளிற் றமிழர் மிகப் புகழ் பெற்று வாழ்ந்தபோது வடஆசியாவிலிருந்து சிந்து நதிப் பக்கமாய் ஆரியமக்கள் இந்தியாவினுட் புக, உள்ளிருந்த தமிழர்இயற்கையிலே விருந்து வருவாரை ஓம்பிப்போற்றுங் கடப்பாடுடையராதலால் தம் நாடு தேடிப் பிழைக்கவந்த ஆரியமக்களை நல்வரவாக ஏற்று அவர்க்கு வேண்டுவன தந்து ஓம்பினார். ஆரியர் வருங்காலத்துத் தமிழர் மிக்க நாகரிக வாழ்வுற்றிருந்தன ரென்பதை இருக்குவேத வுரைகொண்டு முன்னரே இனிது விளக்கினாம். இனி, அங்ஙனம் போந்த ஆரிய மக்களோடு தமிழர் பெரிதும் அளவளாவினாரகலின், அவர்க்குரிய ஆரிய மொழியினையுந் தாங்கற்று அதனையும் பண்படுத்துவந்தனர். ஆரியமக்கள் செய்யும் வேள்வி விழாக்களுக்குத் தாமும் பொருளுதவி செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/67&oldid=1591730" இலிருந்து மீள்விக்கப்பட்டது