உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

45

அப்படியாயின் உபதேசம் பெற்றேனென்று ஏன் இங்கு வந்தாய்? ஒன்றுமறியாதவன் அறிவிக்கப்பட்டானென்று நீ எப்படிச் சொல்லலாம்?’ என்றான் அரசன். அதனைக் கேட்டலும் மிக்க விசனத்தோடும் தன் தந்தையிடம் திரும்பிப் போய் 'தந்தாய்! எனக்கொன்றும் உபதேசியாமலே, எல்லாம் உபதேசிக்கப்பட்டன வென்றீரே” என்றான்.(4)

அப்பொல்லாத அரசன் என்னை ஐந்து வினாக்கள் வினாவினான், அவற்றுள் ஒன்றற்கேனும் என்னால் விடை யிறுக்க முடியவில்லையே' என்றான். அது கேட்ட தந்தை ‘நீ சொன்ன அக் கேள்விகள் ஐந்தனுள் ஒன்றற்கேனும் எனக்கே டை தெரியவில்லையே; அவை எனக்குத் தெரிந்தனவாயின் நினக்கேன் யான் சொல்லாமலிருப்பேன்?' என்று கூறினான்(5)

கௌதமகோத்திரத்தாரான அவர் தந்தை அவ்வரசன் அரண்மனைக்குப் போயினார். அவர் வருகையைக் கண்ட அரசன் விருந்தினர்க்குச் செய்யும் வழிபாடுகளெல்லாம் ஆற்றினான். மறுநாட் காலையில் அவர் அரசன் அவைக் களத்தே சென்றார். அரசன் அவரை நோக்கி, ‘ஓ கௌதமரே! உலகத்துப்பொருள்களிற் சிறந்ததெதுவென்று நினைக்கின்றீரோ அதனைக் கேளும்' என்றான். அதற்கவர் ‘உலகியற்பொருள்கள் எனக்கு வேண்டாம் அவை நின்பாலே யிருக்கட்டும். ஓ வேந்தனே! நீ என் புதல்வனைக் கேட்ட ஐந்து வினாக்களையும் எனக்கு விளக்கிச் சொல்லுதல் வேண்டும்' என்றார் (6)

அதுகேட்டரசன் விசனமுடையானய், ‘என்னுடன் சிலநாள் இருக்கக்கடவீர்’ என்று கட்டளையிட்டான். அது கழிந்தபின் அரசன் அவரை நோக்கி, ‘நீர் இவ்வாறு விசாரணை செய்யப் புகுந்தமையானும், இதற்கு முன் பிராமணன் எவனும் இவ்விரகசியத்தை அறியானாகலானும், இவ்வுலகத்திலுள்ள எல்லா மக்களுள்ளும் ராஜந்யர்க்கு மாத்திரமே இதனை உபதேசிக்கும் உரிமையுண்டாகலானும் யாம் இதனை உமக்கு அறிவுறுத்துகின்றாம்' என்று உபதேசிக்கத் தொடங்கினான்’ என்று சொல்லப்பட்டது.

இன்னும் இவைபோல உபநிடதங்களில் ஆண்டாண்டு வருவனவெல்லாம் ஈண்டுக் காட்டலுறின் இது மிகவிரியுமென வஞ்சி விடுக்கின்றாம். இவை தம்மால் தேறப்படும் முடிபுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/70&oldid=1591734" இலிருந்து மீள்விக்கப்பட்டது