உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

66

மறைமலையம் - 29 -

விதேகர்கட்கு மன்னனான சனகன் அப்போதுதான் வந்த பிராமணர் சிலரைச் சந்தித்தான். அங்ஙனம் சந்திக்கப் பட்டவர்கள் சுவேதகேது ஆருணேயர், சோமசுஷ்ம சத்தியஞ்ஞர், யாஞ்ஞவற்கியர் என்பவராம். அவன் அவர்களை நோக்கி: 'நீங்கள் அக்நி ஹோத்திரத்தை எவ்வாறு செய்கின்றீர்கள்?' என்று வினவினான். பிராமணர் மூவரும் தம்மாற் கூடியவரையினும் விடை கூறினராயினும், அவர் கூறிய தொன்றேனும் திருத்தமான தன்று. யாஞ்ஞவற்கியர் கூறியது சிறிது பொருந்தினும் அதுவும் முற்றும் திருத்தமாகவில்லை. சனகன் அவ்வளவுதானேவென்று சொல்லிவிட்டுத் தன் இரதத்தின்மேலேறிப் போயினான். அக்குருக்கள் மூவரும் ராஜந்ய வகுப்பைச் சேர்ந்த இப்பயல் நம்மை அவமானம் செய்தனனே என்று கூறினார். யாஞ்ஞவற்கியர்மட்டும் இரதத்தின் மேலேறி அவ்வரசனைத் தொடர்ந்து போய் அவனால் அதன் நுண்பொரு ளறிவிக்கப்பட்டுத் தமதறியாமை நீங்கினார். அதுமுதற் சனகன் பிராமணனாக நன்கு மதிக்கப் பட்டான்” என்று சொல்லப்பட்டது.

.

சாந்தோக்கிய உபநிடதம் ரு-வது பிரபாடகம், 3-வது கண்டம், "சுவேதகேது ஆருணேயர் பாஞ்சால மன்னன் அவைக்களத்தே சென்றார். பிரவாகன சைவலி என்னும் அவ்வேந்தன் அவரை நோக்கிப் 'பிள்ளாய்! நின்றந்தை நினக்கு ஞானோப தேசஞ் செய்தனரா?' என்று கேட்டான். 'ஐயா! ஓம் அவர் செய்தனர்' என்று அவர் விடை கூறினார். (1)

'இந்நிலத்தினின்றும் மக்கள் எங்கு எழுகின்றனர் நீ அறிவையா?' என்று வேந்தன் வினவினான் அதற்கு அவர் ‘ஐயா, நான் அறியேன்' என்றார் ‘திரும்ப அவர் எங்கு செல்கின்றார் அறிவையா?' என வினவினான்; அதற்கவர் ‘ஐயா நான் அறியேன்’ என இறுத்தார்; தேவயானத்திற்கும், பிதிர்யானத் திற்கும் எங்கே பேதமுண்டாகின்றது அறிவையா?' என வினவினான்; ஐயா நான் அறியேன்' என்றார்.(2)

'மறுமையுலகம் அறிவையா?' என்று வினவினான்; அதற்கு அவர் ‘அறியேன் ஐயா' என்றார்; 'பஞ்சமாகுதியில் திரவப்பொருள்கள் ஏன் புருஷசப்தமெய்துகின்றன அறிவையா?' என்று வினவினான்; அதற்கவர் ‘ஐயா நான் அறியேன்' என்றார்.(3)

ஏன் நிறைக்கப் படுவதில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/69&oldid=1591733" இலிருந்து மீள்விக்கப்பட்டது