உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
85

தலால், அவர் அதனைச் செய்தவனுக்கு உடனே தாமும் தீங்கு செய்யாமல் ‘இன்னும் பார்ப்போம். இன்னும் பார்ப்போம்’ என்று விட்டிருப்பர். அங்ஙனம் இன்றிப் பொல்லாதவன் ஒருவனுக்கு மற்றொருவன் ஒரு தீங்கு செய்தால், அவன் தன் பொல்லாத குணத்தால் உந்தப்பட்டு உடனே மற்றவனுக்குத் தானும் தீங்கு இயற்றிவிடுவன்.

இனிப் பிறர் பழியினை மிகுதியும் பாராட்டி மனவைரம் கொள்ளாதவனுக்கு ஒருவன் தீங்கு செய்து வந்தால் அவன் அதனை மிகுதியும் பாராட்டான். ஆகையால், தீங்கிழைத்தவனுக்குத் தன் மனம் வைரம் ஏறும் அளவும் தான் ஏதும் இன்னல் இயற்றாமலே ஒழுகுவான். எளிதில் வைரம் ஏறும் ஒருவனுக்கு அங்ஙனத் தீங்கு செய்யப்படுமாயின் தீங்கு செய்தவன் அவனால் உடனே தண்டிக்கப்படுதல் திண்ணமா மென்க.

இனி அறிவின் நுட்பங்கள் வாய்ந்தார் ஒருவர்க்கு ஒருவன் தீதுசெய்வானானால், அவர் தம் அறிவின் நுட்பத்தால் மிக இலேசிலே அவனுக்குப் பலவகையில் துன்பத்தை விளைவித்துத் தண்டிப்பர். அறிவில்லான் ஒருவனுக்குப் பிறனொருவன் இன்னா செய்தால், அவன் தன் அறிவின்மையால் அவனுக்கு அதனைத் திருப்பிச் செய்தற்குரிய வழிவகைகள் தெரியாமல் சும்மா இருந்து விடுவன். இங்ஙனம் இப்பிறவியிலேயே தனக்குத் தீது செய்தவனுக்குத் தானும் தீங்கு செய்தல் பலதிறப்பட்டு ஏறியுங் குறைந்தும் விரைந்தும் தாழ்ந்தும் நடைபெறுதலை நமதனுபவத்திற் காண்கின்றோம் அன்றோ? துபோலவே ஏனைப் பிறவிகளினும் வைத்து அறிந்து கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/118&oldid=1623409" இலிருந்து மீள்விக்கப்பட்டது