உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134

❖ மறைமலையம் - 3 ❖

இங்கு நிகழ்வதைக் காட்டினும் மேலுகங்களிற் சிறுபான்மையே நிகழுகின்ற தென்பது ஆவி வடிவங்களில் நிற்போர் கூறும் உரைகளைக் கொண்டு துணியப்படுகின்றது. வெள்ளைக்காரர் ஆவி வடிவங்கள் தாம் உலவும் உலகங்களைப் பற்றியும், தம்மினத்தவரைப் பற்றியும் தாம் தொழுதுகொண்டு வந்த தெய்வத்தைப் பற்றியும் கூறுகின்றனவே யல்லாமல், வேறு நாட்டவரான நம் இந்தியரின் ஆவிகளைப் பற்றியும் அவை யுலவும் மண்டிலங்களைப் பற்றியும் அவர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றியும் உரைப்பக் காண்கின்றிலேம். இப் பரதகண்ட வாசிகளான நம்மவர் ஆவிகளும் அங்ஙனமே தம்முலகங்களைப் பற்றிப் பேசக் கண்டனமே யல்லாமல், வேறு அயல்நாட்டவர் அனுபவங்களையும் நிலைகளையும் பற்றி ஒரு சிறிதும் உரைப்பக் காண்கின்றிலேம். ஆகவே, இம் மண்ணுலகத்தில் ஓரிடத்திருந்து மற்றோரிடத்திற்குச் செல்வதைக் காட்டிலும், மேலே ஒருவகை யுலகங்களில் உறைபவர் பிறிதொருவகை யுலகங்களுக்குச் சல்வது அருமையாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டு மென்னும் உண்மை உய்த்துணரப்படுகின்றது. இஃது ஏது காரணத்தால் என்றால், இப்போது ஒரு நாட்டில் உறைபவர்கள் வேறு ஒரு நாட்டில் உறைபவர்களைத் தம்மினுங் கீழ்ப்பட்டவராக நினைத்தலாலும், ஒருவர் சமயக் கொள்கைகளையும் தெய்வத்தையும் உலக நடைகளையும் மற்றவர் பொருந்தாதன வென்றும் பொய்யென்றுங் கருதுதலாலும் அவர் சிறுபான்மை அறிவும் பழக்கமும் உடையவரா யிருக்கின்றனர். இந்த நிலைமையிலுள்ள இவர்கள் மேலுலகங்களுக்குச் சென்றவிடத்து அங்கும் இச் சிற்றறிவும் சிறு பழக்கமுமே மேற்பட்டவரா யிருத்தலால், அவர்க்கு ஏனை யுலகங்களைப் பற்றியும் அங்குள்ள ஆவிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமற் போகின்றது.எல்லா வுயிர்களும் அறிவு உடையனவே யாமென்று, தம் அறிவை மறைத்த அறியாமை நீக்கத்திற்கு ஏற்ப அவை பலவகை யுடம்புகளிற் புகுமாறு சேர்ப்பித்து அவற்றை ஒன்றினொன்று ஏற்றமான பிறவிகளின் மேற்கொண்டு செல்லும் இறைவன் ஒருவனே யென்றும், மக்கள் தமது பல்வேறு வகையான தரங்களுக்கு ஏற்ப பலவற்றைத் தெய்வமாக வணங்குவராயினும் அவற்றின்கண்ணெல்லாம் நின்று அவர் செய்யும் வழிபாடுகளை ஏன்றுகொண்டு அவர் தம் தகுதிக்கேற்றபடி யெல்லாம் அருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/167&oldid=1624586" இலிருந்து மீள்விக்கப்பட்டது