உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
221

தொடர்புற்று நிற்கும் நரம்புகள் இறுக்கமாய் நில்லாமல் தளர்ந்து நிற்றல் வேண்டும். அது மட்டுமோ! எழுதுதற்குக் கருவிகளான உறுப்புகளின் நரம்புகளும் எழுது முயற்சிக்குத் தக்க அளவு இறுகி நிற்றல் வேண்டுமே யல்லாமல் அவ்வளவிற்கு மேலும் இறுக்கமாயிருத்தல் பழுதுடைத்தாம். எழுதுங் காலத்திற் சிலர் இலகுவாய் அமர்ந்திருத்தலை விடுத்து உடம்பை மிக நிமிர்த்தி முதுகை வளைத்து வீறாப்புடன் உட்காருதலால், நரம்புகள் அளவுக்குமிஞ்சி இறுதி உயிராற்றலை மிகுதியாய்க் கழிய விடுகின்றன.

வேறு சிலர் எழுதுகோலை விரல்களில் இலகுவாய் இடுக்கிக்கொள்ளுதலை விடுத்து மிகவும் நெருக்கமாகப் பிடிக்கின்றனர்; இங்ஙனம் அளவுக்குமேல் இறுக்கிப் பிடிப்பதனால் விரைந்து எழுத இயலாமற் போவதுடன் விரல்களைத் தொடர்ந்துள்ள நரம்புகளிலும் உயிராற்றல் மிகுதியாய்க் கழிந்து போகின்றது.அன்றி எழுதும் முயற்சியை இலகுவாய்ச் செய்தாலும், சிலர் இடையே சிறிதும் ஓய்வின்றி நெடுநேரம் ஒரே மூச்சாயிருந்து எழுதுகின்றனர். இடையொழிவு சிறிதும் இன்றி நரம்பை ஒரே தொடர்பாக இழுத்துப் பிடித்துக் கொண்டு கண்ணையுங் கருத்தையும் புறப்பொருள்களில் அழுந்த வைப்பதனால் உயிராற்றல் அளவுக்குமேற் கழிந்துபோதலின், அங்ஙனம் உழைப்பெடுப்பவர் நீண்டநாள் உயிர்வாழார்; பலவகைப் பட்ட நோய்களுக்கு இரையாக இறப்பர். அரிய பெரிய பொருள்களை நீளத் தொடர்ந்து எழுதும்போது, இடையிடையே சிறிது இளைப்பாறிக்கொண்டு எழுதுதல் வேண்டும். இளைப்பாறுதல் என்பது எடுத்த முயற்சியை விடுத்து இலகுவான வேறொன்றைச் செய்வதன்று; நரம்புகளை முற்றுந் தளரவிட்டு ஒன்றையும் நினையாமல் அயர்ந்து கிடத்தலேயாகும். இளைப்பாறுவது இன்னதென்றே தெரியாதார்சிலர் மெல்லிய பஞ்சணைகள்மேற் படுத்துக்கொண்டு காலையாட்டுவதும் கையையாட்டுவதும் புரளுவதும் வீண் எண்ணங்களைக் கோடி கோடியாக நினைவதும் செய்கின்றனர்.

படுத்தாலும் இருந்தாலும் நரம்புகளை இறுக வலித்துக் கொண்டு எண்ணங்களைப் பலதலையாக ஓட விடுவது சிறிதும் இளைப்பாறுதல் ஆகமாட்டாது.உண்மையான இளைப்பாறுதல் இன்னதென்று உணர வேண்டின், வேனிற்காலத்துக் கடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/254&oldid=1625683" இலிருந்து மீள்விக்கப்பட்டது