உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
225

அதுபற்றி அவர் குற்றஞ்சொல்லப்படாரெனின்; அது பொருந்தாது, சிற்சில திங்கள் முயன்று தாம் தேடும்பொருளில் ஒரு கூறு மிகுத்து வந்தாலும் அவர்கள் குதிரை மாடு முதலிய விலங்குகளை எளிதாக விலைக்குப்பெறலாம்; அது தானும் சய்துகொள்ள மாட்டாது சோம்பல் மிகுந்து அன்றன்று கிடைத்த பொருளைக் கள்ளுக்குஞ் சூதுக்கும் வேறு பல தீயவழிகட்கும் செலவழித்து விலங்குகளினுங் கடைப்பட்டவர் களாய் வாணாளை வீணாய்க் கழிக்கின்றனர்; ஆதலால், அவர்கள் தமது வாழ்நாளை அங்ஙனம் பாழாக்கும்படி ங்கொடுத்தலாகாது. இத்தகைய சோம்பேறிகள் இழுக்கும் வண்டிகளில் ஏறுவதும்,அவற்றிற் பொதிகளை ஏற்றுவதும்,அவர்களின் தலைகளிலும் முதுகிலும் தாங்குதற்கு வருத்தமான பருஞ்சுமைகளைத் தூக்கிவைப்பதும் அறிவுடையோருக்குச் சிறிதும் ஆகாதனவாம். இத்தகைய கடுந்தொழில்களிலேயே அவர்கள் தமது காலத்தைக் கழிக்கும்படி பழக்கப்படுத்தி வந்தால் அதனால் அவர்கள் மிகுந்த அலுப்பும் உறக்கமும் அடைய பெற்றவராகி அறிவு வளராது விலங்கினங்களைப் போலவே யிருப்பர். அதுவல்லாமலும் கடுகிய உழைப்பால் அவரது உடம்பும் இறுகிக் கருங்கற்போல் வலிவுடையதாகும். அறிவின் வளர்ச்சிக்கு உடம்பிலுள்ள கருவிகள் மெல்லிய இயல்பும் துவளுந்தன்மையும் உடையனவாயிருத்தல் வேண்டும்; கருங்கற் போல் இறுகிய உடம்பு வலிவுடையதாயிருந்தாலும்,மெல்லிய இயல்புடைய உடம்புபோல் மேன்மை உடையதாகாது; இறுகிய உடம்புதான் வலிவு மிக்கதென்றும், மெல்லிய உடம்பு அஃது இல்லாததென்றும் நினைத்தலும் பழுதாகும். கருங்கல் வலிவுடையதாயினும் அதனையும் அப்பாற் பெயர்த்தெறியும் மெல்லிய காற்றின் ஆற்றலை நினைத்துப் பாருங்கள்!

கருங்கல் சிலகாலத்தில் தூளாக நுறுங்கி அழியினும் அழியும், காற்று அங்ஙனம் அழியுமோ? இதுபோலவே, இறுகிய வுடம்பு பருவம் முதிராமுன்னரே பழுதுபட்டொழியினும் ஒழியும், மெல்லியவுடம்போ அங்ஙனம் இறந்தொழிவதில்லை. இறுகிய வுடம்பு நுண்ணிய தொழில்களைச் செய்யமாட்டாது, மெல்லிய வுடம்போ அவற்றையும் வேறு பலவற்றையும் எளிதிற் செய்யவல்லதாகும். இறுகிய வுடம்புக்கு நோய் வந்தால் அது கரைந்து தேறாது, மெல்லியவுடம்புக்குப் பிணிவந்தால் அஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/258&oldid=1626066" இலிருந்து மீள்விக்கப்பட்டது