உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
301

இனி, நினைவற்ற ஆழ்ந்த துயிலில் இருப்போர்க்குப் புறத்தே சுற்றிலும் நடப்பது ஒன்றுந் தெரியாதென்பதை முன்னரே காட்டினாம். இத்தூக்கத்திலிருப்போர்க்கு இது கலையாமலே, இவர்களை விழித்து உணர்வுபெறுமாறு செய்து பல புதுமைகளை விளைவித்துக் காட்டுவதுடன், தீர்த்தற்கரிய கொடு நோய்களையும் தீர்த்துவிடலாம். இயற்கையான விழிப்புக்கு வராமலே கண்களைத் திறந்து, துயிற்றுவோர் சொல்வனவற்றை உணர்ந்து செய்யும்படி இத்தூக்கத்தில் ஒருவரைச் செலுத்துகை யிலேயே கற்பித்து ஒழுங்கு செய்து காள்ளல் வேண்டும். மேற்கூறிய நினைவுத் துயிலில் இருப்போரைப் பின்வருமாறு செய்து இந்நினைவற்ற துயிலிற் செலுத்துக. கடைச் சிறுவிரல் தவிர ஏனை விரல்களைச் சேர்த்தபடியாய் இரண்டு கைகளையும் நீட்டி அவரது உச்சந் தலைக்குமேற் கீழ்நோக்கிப் பிடிக்க. அங்ஙனம் பிடித்திருக் கையில் அவ்விரல்களின் நுனிவழியே தமது மின்னாற்றல் அவரது உச்சந் தலையினுள் இறங்கி அவரை நினைவற்ற ஆழ்ந்த துயிலின்கட் கொண்டு செல்வதாகத் துயிற்றுவோர் நன்றாய் உறுத்து நினைத்தல்வேண்டும்.

இப்படிச் சிறிது நேரம் நினைத்தபின்,படித்த அவ்விரல் களால் அவ்வுச்சந் தலையிலிருந்த அவரது முழங்கால் வரையில் தடவிப், பிறகு பக்கச் சாய்வாய் அக்கைகளைப் புரட்டி அவர்தம் விலாப்பக்கமாக மேலுயர்த்தி மறுபடியும் தடவுக. இங்ஙனம் பலகாற் செய்தபின் 'இப்போது நீர் ஆழ்ந்த - தூக்கத்திற் - - செல்லுகிறீர். உம்மைச் சுற்றிலும் நடப்பது இன்னதென்று உமக்குத் தெரியாது. யான் சொல்வனவற்றைத் தவிர வேறொன்றும் - உமக்குத் - தெரியாது. என் சொற்களைத் தவிர - வேறொன்றும் - உமக்குக் கேளாது. நீர் - ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, யான் - சொல்லுகிறபடியே - செய்வீர் இப்போது நல்ல - ஆழ்ந்த - தூக்கத்தில் - இருக்கின்றீர் -தூக்கம் - அயர்ந்த தூக்கம் - ஆழ்ந்த தூக்கம் - ஆழ்ந்த தூக்கம்,' என்று திருப்பித்திருப்பி ஆழ்ந்த தீர்மானமான குரலிற் பலகாற் சொல்லி, இடையிடையே மேற்சொல்லியபடி உச்சந்தலை யிலிருந்து தடவுதலுஞ் செய்க. இவ்வாறு கால்மணி நேரம் வரையிற், செய்தவுடனே அவர் ஆழ்ந்த துயிலிற் சென்று தூங்குவர். இத்தூக்கத்திற்கு அறிகுறியாக ஒரே அளவாக நெட்டுயிர்ப் பெறிவர்; காதண்டை எவ்வளவு பெரிய ஓசையை எழுப்பினாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/334&oldid=1626197" இலிருந்து மீள்விக்கப்பட்டது