உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
307

இங்ஙனம் பலமுறை செய்தால் அவ்வலி இருந்த இடத்தை விட்டுக் கீழ் இறங்கும்;அப்புறம் அதனை அறவே நீக்குதல் எளிது. இம்முறையோடு, பொருத்துக்களில் உள்ள பிடிப்பை இளகச் செய்தற்குரிய தைலங்கள் இட்டுத் தேய்த்தலும்,அங்ஙனந் தேய்த்தற்குமுன் பிடிப்புள்ள இடத்தை நீராவியிற் காட்டுதலும் பெரிதும் நன்மை பயக்கும்.

இங்ஙனமே வெப்புநோய், காதுவலி, கண்வலி, நீர்க்கோவை, நரம்புவலி முதலானவைகளையும் நினைவற்ற துயிலின் உதவியால் மேற்கூறிய முறைப்படி செய்து எளிதிற் போக்கலாம். இம்முறைகளை ஒருவர் எவ்வளவுக்குச் செய்து செய்து பழகுகின்றாரோ, அவ்வளவுக்கு அவர் அந்நோய்களையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நீக்கவல்லுநர் ஆவர். இம்முறைகளை வழுவாமற் பழகும் பழக்கமே இந்நோய்களைத் தீர்த்தற்குச் சிறந்த மருந்தாகும். இம்முறைகளை நன்கு பழகித் தேர்ச்சி பெற்ற ஒருவர் (Dr. Herbert. A. Parkin, M.D. See New Thought Dec No. 1903.) மருந்துகளிற் றீராத சுவாசகாசம் என்னும் ஈளை நோயால் வருந்தின ஒருமாதரார்க்கு அதனைத் தீர்த்த தீர்த்த உண்மை வரலாற்றினை இங்கே மொழிபெயர்த் தெழுதுகின்றாம்:-

ஒருநாள் மாலைக் காலத்தில், முப்பத்திரண்டு ஆண்டுள்ள ஒரு மாதரைச் சென்றுபார்க்கும்படி அழைக்கப்பட்டேன். அம்மாதர் பதினைந்து ஆண்டுகளாக நிரம்பவுங் கொடுமையான சுவாசகாசத்தால் நிரம்பத் துன்புற்று வந்தனர். முதன்முதல் அவ்வம்மையார்க்கு அந்நோய் வந்தபோது அதனை ஆராய்ந்து பார்த்தவர் அஃது எலும்புருக்கி நோய் என்றனர். பின்னர்ப் பெருக்கக் கண்ணாடி (Microscope) வழக்கத்துக்கு வந்த சில ஆண்டுகளில் அந்நோயை ஆராய்ந்து காண அது சுவாசகாசம் என்னும் ஈளை நோயாமென்று உறுதிப்படுத்தினர். யான் அந்த அம்மையைப் பார்க்கச் சென்றபோது, அவர் தெற்கேயுள்ள ஓர் ஊரிலிருந்து அப்போதுதான் அங்கே வந்துசேர்ந்தனர்; அவ்வூரிற் பல்லாண்டுகள் சென்று தங்கியும் அவர்க்கு ஏதும் நன்மை விளைந்திலது. படுக்கையிற் பல தலையணைகளை அடுக்கி அவற்றின்மேற் சாய்ந்த படியாய் இளைப்பினால் துன்புற்றுக் காண்டு அவர் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அவர்தம் வாயிதழ்கள் நீலநிறமாயும் கைகால்கள் சில்லென்றும் இருந்தன. பலமணி நேரங்களாய் நோய் நிரம்ப மும்முரமாக இருந்தது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/340&oldid=1626205" இலிருந்து மீள்விக்கப்பட்டது