உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
47



தீர்வைகளின் சீர்திருத்தத்தைப் பற்றியன


ஸ்டெட் : “நிலத்தைப்பற்றியும் அனுமதி கொடுப்பதைப் பற்றியுங் கொண்டுவந்த யோசனைகளைப் பற்றித் தங்கள் அபிப்பிராயம் யாது?”

கிளாட்ஸ்டன் : “முந்தியதை யான் ஏற்றுக் கொள்ளுகின்றேன். அனுமதி தருவதைப்பற்றிய பிந்திய விஷயங்களில் எனக்கு ஒரு சிலவே உடன்பாடாயுள்ளன. அப்பத்திரத்தின் இந்தப் பகுதியானது மிகவும் கண்டிப்பாகத் தழுவப்படல் வேண்டுமென்று வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், அவைகளிற் காட்டப்பட்ட ஒப்பந்தங்களிற் சில சிறிதும் ஒழுங்கில்லாதன வாய்ச் செய்யப்பட்டிருக்கின்றன; அவைகள் வற்புறுத்தப்படுமானால் அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரும்போது அவை மிக்கதொரு குழப்பத்தையும் மனவருத்தத்தையும் விளைவிக்கும்.”

இங்கே ஆவேசக்காரன் சொல்லியது : “ஒரு நொடி நேரம் அவர் சும்மா இருக்கிறார். அவரைக் கொண்டு வந்து இங்கே தொடர்பு படுத்துவது மிகவும் பிரயாசையாக இருக்கிறது.”

ஸ்டெட் : “தினசரி வர்த்தமானப் பத்திரிகாசிரியரால் அனுப்பப்பட்ட கேள்விகளை உங்கட்கு வாசித்துக் காட்டட்டுமா?”

கிளாட்ஸ்டன் : “தயைசெய்து அவற்றை நிறுத்தி மெதுவாகப் படியும்; அப்படிப் படிக்கும்போது அவற்றை நன்றாய்ச் சிந்தியும்; உம்முடைய மனத்தினின்றே அக் கருத்துகளை யான் தெரிந்து கொள்ளுகின்றேன்.”

அதன்படியே ஸ்டெட் துரையவர்கள் அவற்றைப் படித்தார்.

ஸ்டெட் : “ஐயா கிளாட்ஸ்டன்! இவைகள் என்னுடைய கேள்விகள் அல்லவென்பது தாங்கள் அறிவீர்கள். இத்தகைய கேள்விகளை உங்களிடம் கேட்க யான் கனவிலுந் துணிந்திருக்கமாட்டேன். ஆயினும், இவைகளுள் ஏதேனும் நன்மை நோக்கி விடையளிக்கத் தக்கதென்று தங்கட்குத் தோன்றுமானால் அஃது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருவதாகும்.”

கிளாட்ஸ்டன் : “இந்தக் கேள்விகளுக்கு விடையளிக் குங்கால் இவற்றுள்ளிருக்கும் விஷயங்கள் மிக்க ஆழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/80&oldid=1628592" இலிருந்து மீள்விக்கப்பட்டது