உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
51

ஓர் இரண்டாவது மண்டபச் சபையாரை ஏற்படுத்துவதில் யான் முற்றும் உடன்பாடு உடையேன்.”

ஸ்டெட் : திரவிய சம்பந்தமான நிர்வாகத்தை அவ்விரண்டாவது மண்டபச் சபையார் வசத்தில் ஒப்புவிக்கத் தங்கட்கு விருப்பமா?”

கிளாட்ஸ்டன் : “திரவிய நிர்வாகம் குடிமக்கள் சபையார் வசத்திலேயே முற்றும் ஒப்புவிக்கப்படல் வேண்டும்.என்றாலும் அதனை இன்று காலையில் ன்று காலையில் எடுத்து விவரிக்க என்னால் முடியாது.”

ஸ்டெட் : “அஃதாவது, நீங்கள் இரண்டாவது மண்டபச் சபை ஒன்று நிலைபெறுத்த வேண்டுமென்றும், அர சிறை கணக்கைச் செவ்வையாக முடிக்கக்கூடுமானால் நாட்டிலுள் ளாரை ஏவிப் பிரபுக்கள் சபையைக் கலைக்க வேண்டுவதில்லை யென்றும் கருதுகின்றீர்களோ?"

கிளாட்ஸ்டன் : “யான் சொல்லக் கருதியதை நீர் மிகவுஞ் செவ்வையாக அறிந்து கொண்டீர்.”

ஸ்டெட்: “ஐயா கிளாட்ஸ்டன் துரையவர்களே! தங்கட்கு யான் நிரம்பவுங் கடமைபட்டவனாயிருக்கின்றேன். முப்பது வருடங்களுக்குமுன் தங்கட்கும் எனக்கும் இருந்த உறவுரிமையை நினைத்துத் தங்களை யான் வரம்புகடந்து நெருக்கி அபிப்பிராயங் கேட்கிறேனென்று உட்கொள்ள மாட்டீர்களென்பது என் நம்பிக்கை. தேவவுலகினின்றும் அமரர்கள் கீழே இறங்கித் துராய் நாட்டின் புழுதி நிறைந்த போர்க்களத்திற் புகுந்து போரிற் கலந்து சண்டையிட்ட ஓமர் காலத்தைப்போல் இந்நாட்கள் காணப்படவில்லையா?”

தன்னுடனிருந்த பழைய அலுவலர்கள்

கிளாட்ஸ்டன் : “ஆம், அஃது அப்படித்தான்; யான் சிறிது நேரத்திற்குமுன் மொழிந்தபடி மாணவகனுக்குள்ள மனக் கவர்ச்சியும் போர்வீரனுக்குள்ள மன எழுச்சியும் என்னிடத்துத் திரும்பவுந் தோன்றுதலை உணர்கின்றேன். ஆனால், யான் நெருங்கிச் சேர்ந்து நிற்பதற்குத்தக்க எவர் ஒருவரையும் காண்பது அரிதாயிருக்கின்றது. இப்போதுள்ள இவ்வாவேசக்காரருடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/84&oldid=1628598" இலிருந்து மீள்விக்கப்பட்டது