உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50

❖ மறைமலையம் - 3 ❖



ஸ்டெட் : “இந்தப் பழைய அரங்கத்திற்குத் திரும்பவும் உங்களை அழைத்ததனால் உங்கள் உள்ளத்தைப் புண்படுத்துகின்றிலோம் என்று யான் எண்ணுகின்றேன். அப்படிச் செய்வதை மெய்யாகவே யான் சிறிதும் வேண்டேன்.”

கிளாட்ஸ்டன் : “இஃது, யான் முன்சொன்னபடியே, எனக்குப் பிரியமில் லாததாயினும், இதனால் யான் மனம் வருந்துவேனல்லேன்

ஆவேசக்காரன் : “அவர் அறைகூவும் ஓசையைக் கேட்க முயல்கின்றேன். அவ்வோசை இச் சொற்றொடர் போலக் காணப்படுகின்றது: குடிமக்களின் அபிப்பிராயங்களைத் தழுவாத சோம்பேறிக் கூட்டம் ஒழியக்கடவது. சண்டையிட்டு உண்மை தெளியுங்காலம் நெருங்கிவந்து விட்டது. என்னுடைய குடிமக்கள், என் பழைய போர் வீரர்கள் நாட்டிலுள்ளார் எல்லார் முயற்சியினையும் இதன் பொருட்டு எழுப்பக் கடவராக. இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற வல்லமை உடையார் பலரையும் பொறுக்கானவர்களையும் ஒருங்கு சேர்க்கும் அறைகூவல் இதுவேதான்.”

ஸ்டெட் : “அரசிறைக் கணக்கைப் பிரபுக்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவார்களானால், இப்படி நடக்க வேண்டுவது அவசியம் என்று வற்புறுத்துவீர்களா? இன்னும் இவர்களைப் பிரித்துவிடுதல் உங்கட்குச் சம்மதமா?”

கிளாட்ஸ்டன் : “இந்த நொடியில் இவர்களைப் பிரித்து விடுவது என் கருத்தில் நல்லதென்று தோன்றவில்லை. அரசாங்க விஷயமாய் பார்க்கும்போது சமாதானமே நல்லதாகும்; ஆனால், இந்த முடிபு செவ்வையாகச் செய்யப்படாமல், முறை தவறி உறுதி செய்யப்படுமானால், அப்போதுதான் எல்லாரும் ஒன்று சேர்ந்து உறுதியோடும் மனத்தெளிவோடும் உடனே போர்க்கு எழவேண்டும்.”

ஸ்டெட் : “அப்படியானால் பிரபுக்கள் சபையாரை முழுதுந் தொலைக்க வேண்டுவதுதானா?"

கிளாட்ஸ்டன் : “இல்லை, இல்லை; என் எண்ணத்தைப் பிழைபட நினையாதீர். இப்போது ஏற்படுத்தப் பட்டிருக்கிற பிரபுக்கள் சபையாரை மாத்திரந்தான் போக்கவேண்டும். வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/83&oldid=1628596" இலிருந்து மீள்விக்கப்பட்டது