❖ மறைமலையம் - 3 ❖ |
சிலசமயம் மேசை மேல் உராஞ்சுவதுபோல் ஓசை செய்து காண்டும் மன அமைதியின்றித் தோன்றும். அவ்வுருவம் வெளிப்பட்டுத் தோன்றியபோது அதனைச் சுற்றிலும் உள்ள அந்தரவெளியில் உண்டான அலைச்சலினால் அஃது எவ்வளவு நிர்பாக்கியமான நிலையிலிருந்ததென்பது புலனாயிற்று. அது வந்தபோதெல்லாம் தான் தன் துன்பத்தினின்று விடுபடும் பொருட்டு இறைவனை நோக்கி வேண்டும்படி ஸ்பெயிண்டன் மோஸஸ் என்பவரைக் கேட்டது. நிலவுலகத்திலிருந்தபோது பொன்னே அதற்குத் தெய்வமாயிருந்தமையால், தனது பொக்கிஷம் வைக்கப்பட்ட இடத்திலே பொற்சங்கிலியாற் கட்டப்பட்டுக் கிடந்தது. அவ்வாவேசம் தோன்றிய போதெல்லாம் அதன் துன்பத்தைப் பார்த்துத் தமக்கு உண்ட வேதனையும், அதனைப்பற்றித் தெரிந்ததனால் விளைந்த விசனமும் இவ்வளவென்று சொல்லினாற் சொல்லிக் காட்ட முடியாதென்று ஸ்டெயின்டன் மோஸஸ் எழுதுகின்றார். அதற்குச் சூக்கும சரீரத்திலுள்ள பெயர் துக்கம் என்பதாம். அதற்கு அவ்வளவு துக்கம் வருவதற்குக் காரணம் யாதென்று வேறொரு சூக்குமசரீரவாசியை வினவியபோது பேராசையே என்று அவர் விடை பகர்ந்தார். என்றாலும், இப்பேராசையைத் தவிர அவனிடத்தில் வேறு தீயகுணம் இல்லை; அவன் இவ்வுலகத்திற்கு உரிய கடமைகளினின்று வழுவியதுமில்லை. அப்படியிருந்தும் அவன் சூக்குமசரீரத்திலே தன் பேராசையால் மிக வருந்தித் தன் நல்ல மனையாள் தன்னுடன் வந்து சேர்ந்து தன்னை உயர்த்தும் வரையில் அதனை எதிர்பார்த்துக் கிடந்தான். இதனாற் பணத்தின் மேலும் மற்ற உலகத்துப் பொருள்கள் மேலும் அளவிறந்த ஆசை வைத்திருந்து இறப்பவர்கள் மறுமையுலகத்திற்குப் போனாலும், அங்கேயிருக்கும் மனமின்றி மறுபடியும் இப்பொல்லாத உலகத்திற்கு வந்து உரைக்கலாகாத பெருந்துன்பம் உற்று உழலுவார்கள். ஆகையாற் பொருளைச் சம்பாதிப்பவர்கள் அப் பொருள்மேற் பற்று வையாமல் தாமும் அதனாற் பெறவேண்டிய பயன்களைப் பெற்றுப் பிறர்க்கும் அதனைப் பலவகையாற் கொடுத்து உள்ளங் கனிந்து உதவிசெய்து, மறுமையுலகத்தில் பேரின்பத்தை அனுபவித்தற்கு இப்போதுதானே வழிப் பிறப்பித்தல் அறிவுடைமைக்கு அழகாகும் என்க.
த
ம