உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

9. திருவள்ளுவரும் இன்பத்துக்கே

முதன்மை தந்தமை

ITL

П

இனிப், பௌத்தசமண் சமயக் குருக்கண்மார் இல்லறத்தை இகழ்ந்து துறவறத்தையே பெரிது கொண்ட நிற்பர். இல்லறத்தின் வழிச்சொல்லாத துறவு, நிலைபேறின்றிச் சீர்குலையும் என்பதற்கு அத்துறவியார் தங்காமக் கர வொழுக்கமே சான்றாம். இவ்வுண்மை கண்டு தெய்வத் திருவள்ளுவர் அவர்தங் கொள்கையை மறுத்தற் பொருட்டே இன்பத்தின் வழித்தாகிய இல்லறத்தை முன்வைத்து

நூல்செய்ததூஉம்,

“அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்”

என்றும்

“இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை”

என்றும்,

66

“ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து'

என்றும்,

“அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயினன்று”

என்றும்,

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/128&oldid=1592320" இலிருந்து மீள்விக்கப்பட்டது