உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • மறைமலையம் - 30

தலைவி முறையில் வைத்து இறைவனைப் பாடியிருத்தலும், சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான திருவுந்தியார்,

“பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே முற்ற வரும்பரிசு உந்தீபற

முளையாது மாயைஎன்று உந்தீபற”

என்று உரைத்தலுமே சான்றாம். அகப்பொருட் காதல் ஒழுக்கத்தினைக் கூறுந் திருச்சிற்றம்பலக்கோவையார் இவ்வாழ்ந்த திருவருளின்பக் கருத்தும் உணர்த்தும் பெற்றியது என்பதற்குச் சிவஞானி ஒருவர் இயற்றின திருக்கோவையார் உண்மை என்னும் நூலுஞ் சான்று பகரும். எனவே, திருவள்ளுவனார் தமதருமைத் திருக்குறள் நூலின் இறுதிக்கண் நிறுத்திய இன்பத்துப் பால், அவர் தாம் வகுத்த இல்லறந் துறவறம் இரண்டிற்கும் பொதுவான இன்பத்தையே உணர்த்துங் கருத்துடையதன்றி, இல்லற நுகர்ச்சியொன்றற்கே உரிய காதலின்பத்தினை மட்டும் உணர்த்துவதன்றென்பது கடைப்பிடிக்க, இவ்வாற்றால், இல்லாளொடு கூடியிருந்து நுகரும் இன்பமே காமத்துப்பாலிற் சால்லப்பட்டதென்னும் அம்மறுப்புரைகாரர்

உள்ளீடில்லாப் போலியாய் ஒழிந்தமை கண்டுக்கொள்க.

கூற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/127&oldid=1592316" இலிருந்து மீள்விக்கப்பட்டது