உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

97

என்று கூறி நன்கு விளக்கியருளினார். அவர் கருத்தறிந்த உரை காரர் பரிமேலழகியாரும் "இல்லாட்குங் கணவற்கும் நெஞ் சொன்றாகாவழி இல்லறங் கடைபோகாமையின், அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பயனாயிற்று” என்று உரை கூறியதூஉம் உற்றுநோக்கற்பாலதாம். இவ்வியல்பெல்லாம் நூல்வழக்கானேயன்றி உலகியல் வழக்கனும் எளிதில் உணரக்கிடப்பவும், இவைதாமும் உணரமாட்டாது, அறமே முதற்கண் வைக்கப்பட்டுதென அம்மறுப்புரைக்காரர் கூறியது இருவகை வழக்கிற்கும் மாறுகோளாம் என்க. எனவே, காதலின்பத்தினை அடிப்படையாய்க் கொண்டெழுந்த இல்லறத்தைத் தெய்வத் திருவள்ளுவர் முன்வைத்து நூ யாத்தது, அவர் பண்டைச் செந்தமிழ் நல்லாசிரியர் நிறுத்திய மெய்வழக்கிற்கு மாறாகாமைப் பொருட்டேயாமென்பதூஉம், தங்காலத்துப் புதிது புகுந்த பௌத்தசமண் சமய வழக்குப்பற்றி அறத்தை முதல் நிறுத்தினும் அவ்வறத்திற்கு அடிப்படையான இன்பத்துக்கு முதன்மை கொடுத்தலே அவர்தம் உண்மைக் கருத்தாமென்பதூஉம், இப்பெற்றி யெல்லாம் நன்காய்ந்து பாராது அம்மறுப்புரைகாரர் கூறிய கூற்றுத் திருவள்ளுவனார் கருத்தொரு முரணிப் பிழைபடுவதாம் என்பதூஉந் தேற்றமாதல்

காண்க.

நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/130&oldid=1592328" இலிருந்து மீள்விக்கப்பட்டது