உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

10. முயற்சிக்கு ஊழ் காரணம் அன்று

செய்யும்

முயற்சி

னி, இன்பத்தை நுதலியே பொருள் ஈட்டுதலும் அறஞ் செய்தலும் நிகழ்கின்றன என்னும் எமது கோட்பாட்டுக்கு முதலில் இணங்கிப் பேசியவர், அம்மட்டில் அமையாது இன்பத்தை நுதலி மக்கள் செய்யும் அவ்விருவகை முயற்சியும் முட்டுப்படுதற்குக் காரணம் பழவினையே என்கின்றார். எல்லா உயிர்களும், அவ்வுயிர்களிற் சிறந்த மக்களுஞ் செய்யும் முயற்சி யெல்லாம் இன்பத்தை நுதலியே நடைபெறுதல் மறுப்புரை காரரையுள்ளிட்ட எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாகலின், அவ்வுண்மையினையே யாம் எடுதது விளக்கின மன்றி, மக்கள் பழவினையால் முட்டுப்பட்டு வறிதாதலையேனும், அன்றி நிறைவேறுதலையேனும் எடுத்துப் பேசினேமல்லேம். அங்ஙனமாகவும், அவர் எடுத்தபொருளை விட்டு அதற்கியைபில்லாத தொன்றனை எடுத்துரைத்தல் 'மேற்கோள்மலை' வென்னுந் தோல்வி (நிக்கிரகஸ்தான) முறையாதலை உணர்ந்திலர் போலும்! இன்பத்துக்கு முதன்மை சொல்லும் எமது மேற்கோளை (பிரதிஞ்ஞை) மறுக்கப் புகுந்தவர் அதனை மறுத்து அறத்துக்கு முதன்மை சொல்லுந் தமது மேற்கோளை நாட்டல் வேண்டுமே யல்லாமல், அதனை விடுத்துப் பழவினைக்கு இடையே முதன்மை சொல்லப் புகுதல், மறுப்பெழுதும் முறை இன்னதென்றே அறியதார்தங் குழறுபடையாம். அறம் முதலியவற்றிற்குக் காரணம் பழவினையே யாயிற், பின்னர் அறத்தைப் பொருளின்பங்களுக்குக் காரண மென்றல் முன்னொடுபின் முரணுமன்றோ? மேலும், பழவினைக்கே முதன்மை சொல்லுவார் மீமாஞ்சகரேயன்றிச் சைவசித்தாந்திகளல்லர். மக்கள் தமது நன்முயற்சியால் ஊழையும் புறங்காண்பர் என்பதே சைவ சித்தாந்திகள் கோட்பாடு; என்னை? மக்கள் தமக்கென ஓர் அறிவுஞ் செயலும் இலராயின், அவர் செய்யும் முயற்சியெல்லாம் ஊழ்வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/131&oldid=1592332" இலிருந்து மீள்விக்கப்பட்டது